தமிழகத்தில் வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..,  போக்குவரத்து கழகம் அறிவிப்பு!!

0
தமிழகத்தில் வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..,  போக்குவரத்து கழகம் அறிவிப்பு!!
தமிழக போக்குவரத்து கழகம் பயணிகளின் வசதிக்காக பல்வேறு சிறப்பு அம்சங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் வார விடுமுறையை முன்னிட்டு ஒவ்வொரு வாரமும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதை நாம் அறிவோம். அதன்படி வரும் மே 17, 18 ஆம் தேதி சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி மொத்தம் 985 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்தப் பேருந்துகள் சென்னையில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 645 பேருந்துகளும், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு 280 பேருந்துகளும் இயக்க உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here