#INDvsAUS சிட்னி டெஸ்ட் – மாமா ஆளுக்கு பத்து பால் ஆடலாம்!! விஹாரிக்கு தமிழில் ஊக்கம் அளித்த அஸ்வின்!!

0

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி பிரகாசமாக இருந்தது. ஆனால் இதனை இந்தியா அணியின் அஸ்வின் மற்றும் விஹாரி அதனை தகர்த்தனர். மேலும் இதற்காக அஸ்வின் விஹாரியிடம் தமிழில் பேசி இந்த திட்டத்தை நிறைவிவேற்றியுள்ளார். தற்போது இந்த செய்தி வைரலாகி வருகிறது.

இந்தியா vs ஆஸ்திரேலியா:

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி பொறுமையாக விளையாடி டிரா செய்துள்ளது. ஏற்கனவே 2 டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில் அதில் இரு அணிகளும் தலா 1 முறை தங்களது வெற்றியை பதிவு செய்துள்ளனர். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 338 ரன்கள் மற்றும் 312\6 எடுத்து 2 வது இன்னிங்சில் டிக்ளர் செய்தது. இந்தியா அணி தனது முதல் இன்னிங்சில் 244 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. வெற்றிக்கு 401 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியா அணி வீரர்கள் ரோஹித் 52, கில் 31, புஜாரா 77, பாண்ட் 97, ரஹானே 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தது. இதன் பின்பு ஆஸ்திரேலியா அணி இந்த போட்டியில் சுலபமாக வெற்றி பெற்றுவிடும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் ஆஸ்திரேலியா அணி கனவை இந்தியா அணியின் அஸ்வின் மற்றும் விஹாரி தகர்த்தனர். இதில் முக்கியமான விஷயம் என்றால் அது, இதற்காக இருவரும் தமிழில் உரையாடி திட்டத்தை தீட்டி இந்த செயலை செய்துள்ளனர். இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது.

மாமா ஆளுக்கு பத்து பால்:

தமிழகத்தை சேர்ந்த வீரர் தான் அஸ்வின். மற்றொரு வீரர் விஹாரி ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர். ஆனால் இவருக்கும் தமிழ் நன்கு தெரியும். இதன்மூலம் அஸ்வின் மறுபுறத்தில் இருந்துகொண்டு விஹாரியிடம், “மாமா இப்படி ஆடு, என்று தொடர்ந்து ஊக்கம் அளித்து வந்தார். மேலும் போட்டியின் நடுவே விஹாரிக்கு காயம் ஏற்பட்டது. இருந்தும் அவருக்கு அஸ்வின் தொடர்ந்து ஊக்கம் அளித்து வந்தார். “மாமா ஆளுக்கு பத்து பால்” ஓவர் முடியபோது பந்து இனி உள்ள வராது என்றும் பந்து வீச வரும் வீரர்களை பொறுத்து, பந்து வரும் நிலையை நன்கு உணர்ந்து அதையும் விஹாரிக்கு டிப் குடுத்தார்.

போன்விட்டா, மேகி போன்ற எப்எம்சிஜி தயாரிப்புகளின் விலை உயர வாய்ப்பு – அச்சத்தில் மக்கள்!!

இருவரும் போட்டியை டிரா செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த விளையாடினர். மேலும் ஆஸ்திரேலியா அணி வீரர்களின் பொறுமையை நன்கு சோதித்துள்ளனர். தற்போது இவர்கள் தமிழில் உரையாடிய தகவல் வைரலாகி வருகிறது. மேலும் அஸ்வினின் இந்த செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான 4 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி பிரிஸ்பேனில் வைத்து நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here