மீண்டும் இணையும் விஜய் சேதுபதி, பார்த்திபன் கூட்டணி – ‘துக்ளக் தர்பார்’ டீசர் வெளியீடு!!

0

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் புதிய படமான “துக்ளக் தர்பார்” படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அரசியல் நகைச்சுவை படமான இதன் டீசர் வெளியானதில் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

துக்ளக் தர்பார்:

சமீபத்தில் விஜய் சேதுபதியின் படமான க/பெ. ரணசிங்கம், OTT யில் ரிலீசாகி வரவேற்பை பெற்றது. அடுத்ததாக டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில், லலித்குமார் தயாரிப்பில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வரும் படம்தான் “துக்ளக் தர்பார்”. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.

அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்க, மேலும் மஞ்சிமா மோகன், கருணாகரன் ஆகியோரும் உடன் நடிக்கின்றனர். இப்படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வைரல் ஆனது. இன்று இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

அதில் பார்த்திபன் அரசியல்வாதியாகவும், அவருக்கு அடியாள் போல விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். டீசரில் இடம் பெற்றுள்ள வசனங்களிலிருந்து அடியாள் அரசியல்வாதியாக மாறுவது எப்படி என்பது போல கதையம்சம் உள்ள படமாக இருக்கும் என தெரிகிறது.

ஏற்கனவே நானும் ரவுடிதான் படத்தில் விஜய்சேதுபதி-பார்த்திபன் காம்போ மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இப்போது இந்த படத்திலும் அவர்கள் இணைவது மக்களிடையே பெரும் ஏதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here