நாடு முழுவதும் வேகமெடுக்கும் பறவைக்காய்ச்சல் – லட்சக்கணக்கான பறவைகள் பலி!!

0

இந்தியா முழுவதும் வேகமெடுக்கும் பறவைக்காய்ச்சல் நோயினால் ஏறக்குறைய 9 மாநிலங்களில் லட்சக்கணக்கிலான பறவைகள் செத்து மடிந்துள்ளன. ஹரியானா மாநிலத்தில் மட்டும் நான்கு லட்சம் பறவைகள் பலியாகியுள்ளது.

பறவைக்காய்ச்சல்

கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் ஒரு பண்ணையில் இருந்த கோழிகள் தீடீரென செத்து மடிய தொடங்கின. இறந்த கோழிகளை ஆராய்ச்சி செய்தபோது அவைகளுக்கு பறவைக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. பறவைக்காய்ச்சலை தடுக்க அம்மாநில அரசால் ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கேரளாவை தொடர்ந்து உத்திர பிரதேசம், ஹரியானா,ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், டெல்லி உட்பட இந்தியாவில் 9 மாவட்டங்களில் பறவைக்காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து வரும் பறவைகளின் மூலமாக இந்நோய் பரவியிருக்கிறது. என்றாலும் இந்த நோய் தாக்கத்தினால் ஹரியானாவில் மட்டும் 4 லட்சம் பறவைகள் மடிந்துள்ளன. ஹிமாச்சல் பிரதேசத்தில் 4 ஆயிரம் பறவைகள் உயிரிழந்துள்ளது.

உடல் எடையை குறைத்து வத்தலும் தொத்தலுமாக மாறி போன கீர்த்தி சுரேஷ் – வருத்தத்தில் ரசிகர்கள்!!

மஹாராஷ்டிராவிலுள்ள ஒரு கோழிப்பண்ணையில் 900 கோழிகள் இறந்துள்ளன. டெல்லியிலும் 8 பறவைகள் இறந்துள்ளன. மேலும் கான்பூர் மற்றும் பிரதாப்கர் உயிரியல் பூங்காக்களில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பறவைகளின் மாதிரிகளை ஆய்வு செய்தபோது அவைகளுக்கு பறவைக்காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. சத்தீஸ்கரில் இறந்துள்ள பறவைகளை ஆய்வு செய்தபோது அவைகளுக்கு பறவைக்காய்ச்சல் இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து நோய் பரவியுள்ள மாநிலங்களில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் மத்திய ஆய்வுக்குழு கேரளா மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். பறவைக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்ப்படுத்தவும் காய்ச்சல் தொடர்பான வதந்திகளை தடுக்கவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here