ஜல்லிக்கட்டில் எந்த சமூகத்திற்கோ, காளைகளுக்கோ முதல் மரியாதை வழங்க கூடாது – நீதிமன்றம் அறிவிப்பு!!

0

வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஜல்லிக்கட்டில் முதல் மரியாதை சிலருக்கு மட்டும் வழங்கப்படுகிறது என்ற குற்றம் எழுந்துள்ளது. தற்போது ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு விதிமுறைகளை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு:

தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும். தற்போது ஜல்லிக்கட்டு அன்று எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது காளைகளுக்கோ முதல் மரியாதை வழங்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மதுரையை சேர்ந்த அன்பரசன் மதுரைக்கிளை உயர்நீதிமன்றத்தில் ஓர் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூரியுதாவது, அவனியாபுரத்தில் தலைமை வகிப்பவர் சுமார் கடந்த 10 ஆண்டுகளாகிய ஜல்லிக்கட்டு நடத்த விளக்கமிட்டு தலைவராக ஒருவரே இருந்து வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் அவர் கணக்கு போன்ற விஷயங்களை ஒழுங்காக சமர்பிப்பதில்லை. மேலும் அவர் பிறரின் கருத்துக்களை கேட்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். மேலும் அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டில் ஆதிதிராவிட சமூகத்தினருக்கு வாய்ப்புகள் இதுவரை அளிக்கப்படவில்லை. இந்த நிலை மீண்டும் தொடர்ந்தால் ஒற்றுமை, ஆர்வம், பங்கேற்பு போன்றவை குறைந்து விடும். எனவே இந்த முறை ஜல்லிக்கட்டில் விழாக்கமிட்டிக்கு தலைமையக ஏ.கே.கண்ணனை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

நீதிபதிகள் மறுப்பு:

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.சுந்தரேஷ் மற்றும் ஆனந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதால் மனுதாரர் கூறும் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மனுதாரர் தரப்பில் கூறியதாவது, “அப்போது கடந்த ஆண்டை போல எந்த ஒரு வீரருக்கோ அல்லது மாடுகளுக்கோ முதல் மரியாதையை மற்றும் தனி ப்ளக்ஸ் போன்றவற்றை வைக்க தடை விதிக்குமாறு கூறினார்.

சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அரசு பரிசிலீக்க வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு!!

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வருடம் அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டிற்கு கடந்த ஆண்டு விதிமுறைகள் படி நடக்க உத்தரவிட்டுள்ளனர். மேலும் இதே போல் பாலமேட்டில் ஓர் வழக்கு தொடர்ந்துள்ளனர். அங்கேயும் விழாக்கமிட்டியின் தலைமையை மாற்றியமைக்க கோரிக்கை விடுத்தனர். ஆனால் கடைசி நேரத்தில் மனுவை சமர்பித்ததால் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு கடைப்பிடிக்கப்பட்ட விதிமுறைகள்:

1. ஜல்லிக்கட்டு நடைபெறும் போது எந்த ஓர் சமூகத்திற்கோ அல்லது மாடுபிடி வீரருக்கோ அல்லது மாடுகளுக்கோ முதல் மரியாதையை அளிக்க தடை.

2. மேலும் ஜல்லிக்கட்டுக்காக செலவழித்த பணத்தின் கணக்குகள், பரிசுப்பொருட்கள் மற்றும் பணப்பரிவர்த்தனை போன்ற கணக்குகள் முறையாக பின்பற்ற வேண்டும்.

3.ஜல்லிக்கட்டு போட்டியின் போது அங்கு எந்த ஒரு அரசியல் கட்சி மற்றும் சமூகம் தொடர்பான கொடிகள், போஸ்டர்கள் மற்றும் தலைவர்களின் புகைப்படங்களை நிறுவ தடை.

4. ஜல்லிக்கட்டு விழா குறித்து அறிக்கையை முழுவதுமாக வீடியோவை பதிவு செய்து அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here