‘குக் வித் கிறுக்கு’ – கன்னடத்தில் ரீமேக்காகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி!!

0
குக் வித் கோமாளி சீசன் 4.., கலந்துகொள்ள இருக்கும் டாப் சீரியல் பிரபலங்கள்.., வட்டாரத்தில் கசிந்த தகவல்!!
குக் வித் கோமாளி சீசன் 4.., கலந்துகொள்ள இருக்கும் டாப் சீரியல் பிரபலங்கள்.., வட்டாரத்தில் கசிந்த தகவல்!!

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சி தொடராக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் குக் வித் கோமாளி கன்னடத்தில் தயாரிக்கப்பட உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலினால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

குக் வித் கோமாளி

பொதுவாக மக்கள் மத்தியில் அதிக ரீச் கிடைக்கும் படங்களோ, தொடர்களோ, நிகழ்ச்சிகளோ மற்ற மொழியில் தயாரிக்கப்படுவது வழக்கம். இந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஸ்டார்ட் மியூசிக், சூப்பர் சிங்கர் ஆகிய நிகழ்ச்சிகள் வெவ்வேறு மொழிகளில் தயாரிக்கப்பட்டு டெலிகாஸ்ட் ஆகி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்துள்ள ஒரே ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தமிழக முதல்வர் – வைரலாகும் புகைப்படம்!!

விஜய் டிவியின் இத்தகைய புதிய படைப்புகளால் தான் இன்று வரை மக்கள் மத்தியில் இந்த தொலைக்காட்சிக்கு தனி மதிப்பு உண்டு. ஒவ்வொரு வாரமும் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை காண வாரம் முழுவதும் ரசிகர்கள் காத்து கிடக்கிறார்கள்.

அந்த அளவுக்கு இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து இந்நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சி முடிவுக்கு வரப்போவதால் ரசிகர்கள் பலரும் சோகத்தில் காணப்படுகின்றனர்.

இந்நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி கன்னடத்தில் தயாரிக்கப்பட உள்ளதாம், அதற்கு ‘குக் வித் கிறுக்கு’ என்று பேர் வைத்துள்ளார்களாம். இணையத்தில் வெளியான இந்த தகவல் குக் வித் கோமாளி ரசிகர்களை சற்று ஆறுதல்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here