மீன் உடலமைப்புடன் பிறந்த குழந்தை உயிரிழப்பு – ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்!!

0

ஹைதராபாத் மகப்பேறு மருத்துவமனையில் மீன் போன்ற உடலமைப்புடன் பிறந்த குழந்தை ஒன்று 2 மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் சம்பவம்

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெட்லாபுர் என்ற மகப்பேறு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு, ஆங்கிலத்தில் மெர்மெய்ட் சின்ட்ரோம் என அழைக்கப்படும் மீன் போன்ற உடலமைப்பு கொண்ட ஒரு குழந்தை பிறந்துள்ளது. புதன்கிழமை இரவு 7 மணிக்கு பிறந்த இக்குழந்தைக்கு, உடல் நல கோளாறுகள் ஏற்பட்டு பிறந்த 2 மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பும்ராஹ்-சஞ்சனா கணேசன் திருமணம் – செல்போனுக்கு தடை!!

இறந்த குழந்தையின் உடலமைப்பு மீன் போன்று இருந்ததால், இதனை அறிவியல் பூர்வமாக சிரெனோமேலியா என்று அழைக்கிறார்கள். பிறக்கும் குழந்தையின் முதுகெலும்பும், கால்களும் பிரியாமல் ஒட்டியே காணப்படுவதால் இந்த பிரச்சனை உருவாகிறது. இந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், இது போன்ற சம்பவங்கள் இதற்கு முன்னால் நடந்ததில்லை என்பதால், இந்த சூழலை சமாளிக்க சிக்கல் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here