அரசு மருத்துவமனைகளில் மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி – முதல்வர் அறிவிப்பு!!

0

கொரோனா தடுப்பூசியை செலுத்திய பின்பு  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  தமிழகத்தில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

தடுப்பூசி:

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரையில் துவக்கி வைத்தார். தற்போது இரண்டாவது கட்டமாக கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட வேறு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் தடுப்பூசி போட்டுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கொரோனா என்னும் கொடிய வைரசுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையில் ஆகியவற்றில் மொத்தம் 2,682 இடங்களில் இலவசமாக தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் 924 இடங்களில் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தமிழக முதல்வர் – வைரலாகும் புகைப்படம்!!

தமிழகத்தில் மொத்தமாக 3,606 இடங்களில் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தமாக 36,14,000 தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்தார். அதில் கோவாக்சின் 5.67 லட்சமும், கோவிஷீல்டு 30.47 லட்சமும் ஆகும். இதில் கோவிஷீல்டு தடுப்பூசியை 10,98,857 பேருக்கும் மற்றும் கோவாக்சின் தடுப்பூசியை 26,846 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here