தமிழக சட்டமன்ற தேர்தல் – காங்கிரஸ் விருப்பமனு விநியோகம்!!

0

தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியில் விருப்பமனு விநியோகம் பற்றிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இதனை கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் வரும் மே மாதத்துடன் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வர உள்ளது. இதற்காக ஏப்ரல் மாதம் இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்க படுகிறது. தற்போது இதற்காக அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை மிக மும்மரமாக செய்து வருகின்றனர். இந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக தமிழகத்தில் உள்ள 234 தொகுதியிலும் யார் போட்டி போட போகிறார் என்பதற்காக விருப்ப மனு தாக்கல் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். மேலும் இதுகுறித்து தெரிவித்த அழகிரி கூறியதாவது, தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் வரும் 25ம் தேதி முதல் மார்ச் மாதம் 5ம் தேதி வரை சென்னையில் உலா சத்யமூர்த்தி பவனில் வைத்து பெறப்பட உள்ளது. இதற்காக வேட்பாளர்கள் படிவத்தை முறையாக நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அதில் கேட்டிருக்கும் ஆதாரங்களையும் முறையாக சமர்ப்பிக்க வேண்டும்.

‘இனி பாரதி வெண்பா வாழக்கையில் குறுக்க வர மாட்டேன்’ – உண்மை தெரியாமல் தவறாக புரிந்துகொள்ளும் கண்ணம்மா!!

மேலும் பொதுத்தொகுதிகளுக்கு போட்டி இடுவதற்கு ரூ.5,000 மற்றும் தனித்தொகுதி மற்றும் மகளிர் போட்டி இடுவதற்கு ரூ.2,500 கட்சியின் நன்கொடையாக வரைவோலை மூலம் செலுத்த வேண்டும். இந்த வரைவோலையை TAMILNADU CONGRESS COMMITTEE என்ற பெயரில் எடுத்து விண்ணப்ப படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கு வரும் 5ம் தேதி தான் கடைசி நாள் என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here