‘இனி பாரதி வெண்பா வாழ்க்கையில் குறுக்க வர மாட்டேன்’ – உண்மை தெரியாமல் தவறாக புரிந்துகொள்ளும் கண்ணம்மா!!

0

தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா பாரதியின் வீட்டில் சமைக்க வந்த பிறகு தொடர்ந்து அகிலன், அஞ்சலி மற்றும் சௌந்தர்யா கண்ணம்மாவை வீட்டிலேயே தங்கவைக்க போராடி வருகின்றனர். மேலும் கண்ணம்மா இனிமேல் இந்த வீட்டு பக்கமே வர மாட்டேன் என்று நினைத்து கொள்கிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோடில் கண்ணம்மா சமையல் வேலை எல்லாம் செய்துகொண்டிருக்க ஹேமாவை விட்டு பெயரை கேட்க சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து அகிலன் ஹேமாவை அழைக்க ஹேமா சென்ற பிறகு கண்ணம்மா என்று கூறுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஏன் இத்தனை நாள் எங்களை பார்க்க வரலை, எங்க நியாபகமே இல்லையா?? என்று கேட்க கண்ணம்மா எதுவும் பதில் சொல்லாமல் இருக்கிறார். தொடர்ந்து வேலை பார்த்துக்கொண்டே இருக்கிறார் கண்ணம்மா. அடுத்ததாக ஹேமா அங்கே வர மல்லிகாவை அங்கிருக்கும் சர்க்கரை டப்பாவை எடுக்க சொல்ல அவர் எங்கு இருக்கிறது என்று தேடுகிறார்.

ஆனால் கண்ணம்மா கரெக்டாக எடுத்து விடுகிறார். இதனை பார்த்து ஆச்சரியப்படும் ஹேமா எப்படி என்று கேட்க கண்ணம்மா என்ன சொல்வது என்று முழிக்கிறார். மேலும் மல்லிகா கண்ணம்மா இங்கு இருந்த நிகழ்வினை பற்றி சொல்ல கண்ணம்மாவும் எல்லாம் ஏன் தலையெழுத்து என்று நினைத்து கொள்கிறார்.

கல்வான் பள்ளத்தாக்கு மோதல் – 5 வீரர்கள் உயிரிழந்ததை ஒப்புக்கொண்ட சீன ராணுவம்!!

அடுத்ததாக அஞ்சலி அங்கே வர கண்ணம்மா அவரை பார்த்து மகிழ்ச்சியடைகிறார். குழந்தையை பற்றி விசாரிக்கிறார். பின்பு அஞ்சலி கண்ணம்மாவை பார்த்து நீ இங்கேயே தங்குவியா?? என்று கேட்க கண்ணம்மா கண்டிப்பாக இல்லை என்று மறுக்கிறார்.

மேலும் இனி ரோட்டில் எங்காவது பார்த்தால் பேசிக்கொள்வோம் என்றும் கூறுகிறார். மேலும் மனதில் அதன் பாரதிக்கும், வெண்பாவிற்கும் கல்யாணம் ஆகிடுச்சே, இனி அவங்க வாழ்க்கையில் குறுக்க வர மாட்டேன் என்று நினைத்து கொள்கிறார்.

அடுத்ததாக சௌந்தர்யா கண்ணம்மாவை வம்பிழுக்க ஹேமாவிடம் என்ன செய்றாங்க உங்க சமையல் ஆண்ட்டி என்று கேட்க கண்ணம்மாவும் இதற்கு சளைத்தவர் இல்லை என்று சமையல் கட்டில் சமையல் தான் செய்வாங்க என்று சொல்ல பதிலடி தருகிறார். மேலும் உங்களுக்கு தான் வெண்பா என்ற புது மருமகள் இருக்காளே என்று நினைத்தும் கொள்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here