கல்வான் பள்ளத்தாக்கு மோதல் – 5 வீரர்கள் உயிரிழந்ததை ஒப்புக்கொண்ட சீன ராணுவம்!!

0

இந்தியா மற்றும் சீன நாட்டிற்கு இடையே பல பிரச்சனைகள் நிலவி வருகிறது. தற்போது கடந்த ஆண்டு நடந்த கல்வான் பள்ளத்தாக்கில் சீன நாடு சார்பில் எத்தனை வீரர்கள் உயிர் இழந்துள்ளார்கள் என்பதை சீன ராணுவம் தற்போது அறிவித்துள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கு:

கடந்த ஆண்டு முதல் சீனா மற்றும் இந்தியா நாட்டிற்கு இடையே எல்லை பிரச்னை, கொரோனா பரவல் என பல பிரச்சனைகளை அடுக்கி கொண்டே போகலாம்.  இந்த பிரச்சனைகளை முன்னிட்டு இந்தியாவில் சீன நாடு செயலியை அனைத்தும் தடை செய்தனர். சீனாவை பழிவாங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு இரு நாட்டவருக்கு இடையே பிரச்னை மிகவும் தீவிரமடைந்தது. இந்நிலையில் இரு நாடு ராணுவ வீரர்களும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி மோதலில் ஈடுபட்டனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இரு நாட்டு ராணுவ வீரர்களும் கல்வான் பள்ளத்தாக்கில் மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் பலர் உயிர்களை இழந்தனர். இந்தியா தரப்பில் 20 ராணுவ வீரர்கள் உயிர் இழந்துள்ளதாக இந்திய ராணுவம் அறிவித்தது. அதேபோல் இந்த மோதலினால் சீன நாட்டில் சுமார் 30 பேர் வரை உயிர் இழந்திருக்கலாம் என்றும் இந்திய ராணுவம் அறிவித்தது. ஆனால் சீனாவில் ராணுவ வீரர்கள் 45 பேர் உயிர் இழந்துள்ளதாக ரஸ்சியாவின் செய்தி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஆனால் இதனை குறித்து சீன ராணுவம் தொடர்ந்து மௌனம் காத்து வந்தது.

தமிழகத்தில் சதத்தை நெருங்கும் பெட்ரோலின் விலை – வேதனையில் ஓட்டுனர்கள்!!

தற்போது கல்வான் பள்ளத்தாக்கில் எத்தனை ராணுவ வீரர்கள் உயிர் இழந்துள்ளார்கள் என்பதை பற்றிய தகவலை சீன ராணுவம் வெளியிட்டுள்ளது. அதன்படி நடந்த கல்வான் பள்ளத்தாக்கு போராட்டத்தில் சீன நாட்டில் 5 வீரர்கள் மரணமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு தக்க மரியாதையை செலுத்தியுள்ளதாகவும் சீன ராணுவம் அறிவித்தது. இதனை அதிகாரபூர்வ நாளிதழான பி.எல்.ஏ செய்தி வெளியிட்டது. அந்த 5 பேர் யார் என்பது பற்றிய தகவலும் வெளிவந்துள்ளது. சீன ராணுவத்தின் சின்ஜியாங் படைப்பிரிவு கமாண்டர் குய் ஃபபவோ, சென் ஹாங்ஜன், சென் சியங்ரங், சியாவோ சியுவான் மற்றும் வாங் ஜூயோரன் ஆகியோர் உயிர் இழந்துள்ளதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here