சரோஜா தேவி, சிவகார்த்திக்கேயன் உட்பட 7 பிரபலங்களுக்கு கலைமாமணி விருது – தமிழக அரசு அறிவிப்பு!!

0

ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசால் கலை மற்றும் இலக்கியத்திற்கான கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்த விருதினை நடிகை சரோஜா தேவி, நடிகர் சிவகார்த்திக்கேயன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைமாமணி விருதுகள்

ஒவ்வொரு ஆண்டும் இயல் இசை நாடகத்துறையில் சிறப்பாக செயல்பட்ட பிரபலங்களுக்கு கலை மற்றும் இலக்கியம் சார்ந்த வகையில், ‘கலைமாமணி விருதுகள்’ தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான கலைமாமணி விருதுகள் வாங்குபவர்களின் பட்டியல் தமிழக அரசால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த 1958ம் ஆண்டு முதல் தமிழக அரசின் ‘கலைமாமணி விருது’ திரைத்துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு நடிகர்கள் ஸ்ரீகாந்த், சந்தானம் மற்றும் பின்னணி பாடகர் உன்னி மேனன் ஆகியோருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டது. தற்போது இந்த ஆண்டிற்கான விருது வாங்கும் பிரபலங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

டீசல் விலை அதிகரிப்பு எதிரொலி – லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்!!

இதன்படி பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி, சரோஜா தேவி, நடிகர் ராமராஜன் ஆகியோருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் சிவகார்த்திக்கேயன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நகைச்சுவை நடிகர் யோகி பாபு, நடிகை சங்கீதா ஆகியோருக்கும் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக நடிகர் விஜய்சேதுபதி, பிரசன்னா, பிரபுதேவா, அஜீத் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த விருதுகளை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here