டீசல் விலை அதிகரிப்பு எதிரொலி – லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்!!

0

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே டீசல் விலை தெடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை முன்வைத்து தற்போது லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர்.

டீசல்:

கடந்த சில நாட்களாகவே தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். மேலும் லாரி உரிமையாளர்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்னனர். தற்போது இதுகுறித்து சேலத்தில் தென் மாநில லாரி கூட்டமைப்பு சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கூட்டம் பொது செயலாளர் சண்முகப்பா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மற்றும் புதுச்சேரி ஆகிய மாநில லாரி உரிமையாளர்களின் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சண்முகப்பா கூறியதாவது, கடந்த சில நாட்களாகவே டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக 18 மாநிலத்தை விட தமிழகத்தில் தான் டீசல் விலை அதிகமாக உள்ளது. இதனால் லாரி உரிமையாளர்களின் வாழவாதாரமே இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சட்டமன்ற தேர்தலில் இந்த டீசல் விலை அதிகரிப்பு கட்டாய முறையில் எதிரொலிக்கும்.

வேலை நிறுத்தம்:

தற்போது இதனை குறைக்காவிட்டால் நாங்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதற்கு சான்றாக வரும் 26ம் தேதி வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபடவுள்ளோம். அதன்பின்பு அடுத்த மாதம் 15ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்று தெரிவித்தார். மேலும் அரசு வாட் வரியை இன்னும் 15 நாட்களுக்குள் குறைத்து விட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தற்போது அமல்படுத்தப்பட்ட பாஸ்டேக் விதிமுறையினால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்தி கடப்பதற்கு ஏதேனும் மாற்று வழியை கட்டாய முறையில் அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அமேசான் நிறுவனத்தை தடை செய்யுங்கள் – அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு கோரிக்கை!!

மேலும் 15 ஆண்டுக்கு முன்னதாக உள்ள வாகனங்களை அரசு அழிக்க போவதாக அறிவித்தது. இதனால் பலர் தங்களது உயிரை விடும் நிலை ஏற்படும். எனவே இந்த திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மாற்று வழிக்கு செல்லுங்கள் என்று கூறினார். எனவே எரிபொருளாக எத்தனால் அல்லது கேஸை பயன்படுத்த கூறினாலும் அதற்கு நாங்கள் தயார் என்றும் அவர் தெரிவித்தார். தற்போது இவர்களின் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பால் அனைவரும் அதிர்ச்சி அடைந்து போய் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here