அமேசான் நிறுவனத்தை தடை செய்யுங்கள் – அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு கோரிக்கை!!

0

நாட்டில் அமேசான் நிறுவனம் வணிக முறையை சீர்கொலைக்கும் முறையில் நடந்து வருவதாக கூறி அமேசான் நிறுவனத்தை தடை செய்ய கூறி அகில இந்தியா வர்த்தகர் கூட்டமைப்பு கோரிக்கையை வைத்துள்ளனர்.

அமேசான்:

தற்போது நாட்டில் ஆன்லைன் விற்பனை தளத்தில் அமேசான் நிறுவனம் தற்போது கொடி கட்டி பறந்து வருகிறது. இந்த நிறுவனம் பயனாளர்களுக்கு பல ஆபர்களை வழங்கி வருகிறது. மேலும் தனது தளத்தில் உள்ள அனைத்து பொருள்களையும் மிக குறைந்த விலையில் பயனாளர்களுக்கு வழங்கி வருகின்றனர். இதனால் பயனாளர்கள் பெரும்பாலும் இந்த தளத்தை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இந்த நிறுவனத்தால் மற்ற ஆன்லைன் வணிக நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறது. தற்போது இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வர்த்தகர்கள் கூட்டமைப்பு பொது செயலாளர் பிரவீன் கூறியதாவது, மற்ற நிறுவனங்கள் வணிகம் செய்யாத அளவிற்கு விலையை குறைத்து வணிகத்தை சீர்கொலைக்கிறது என்று அமேசான் நிறுவனம் மீது குற்றம் சாட்டினார். மேலும் அமேசான் மற்றும் பிலிப்கார்ட் நிறுவனத்தின் வணிக நடைமுறையை அரசு கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்தியாவில் நடந்த பிராந்திய மாநாடு – மருத்துவர்களுக்கு தனி விசா வழங்க மோடி வலியுறுத்தல்!!

அதுமட்டுமல்லாமல் இந்த நிறுவனங்கள் அந்நிய வணிக முதலீடு விதிமுறைகளை மீறுகின்றதா என்பதையும் அரசு ஆராய வேண்டும் என்று பிரவீன் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயலுக்கும் கடிதம் எழுதியுள்ளார். மேலும் எங்கள் கோரிக்கைகள் குறித்து அமேசான் மற்றும் பிலிப்கார்ட் நிறுவனங்கள் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here