இந்தியாவில் நடந்த பிராந்திய மாநாடு – மருத்துவர்களுக்கு தனி விசா வழங்க மோடி வலியுறுத்தல்!!

0

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தனி விசா எனும் நடைமுறையை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். கொரோனா நோய் தொற்று மேலாண்மை தொடர்பான பிராந்திய மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தனி விசா:

“கொரோனா மேலாண்மை, அனுபவம் , நல்ல நடைமுறைகள், முன்னோக்கிய பாதை” என்ற தலைப்பில் நோய்த்தொற்று மேலாண்மை தொடர்பானதொரு பிராந்திய மாநாட்டினை இந்தியா நடத்தியது. இதனை காணொளி மூலமாக தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் “தெற்காசிய நாடுகளை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தனி விசா எனும் நடைமுறையை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதனால் அவசர காலங்களில் அவர்களால் தேவைப்படும் நாடுகளுக்கு விரைந்து சென்று உதவ முடியும்” என்று கூறினார்.

கூகிள் மேப்பால் காவல் நிலையத்திற்கு வழிமாறி சென்ற அஜித் – அலைமோதிய ரசிகர்கள்!!

modi

மேலும் அவர், “நமது பிராந்திய நாடுகள் மற்றும் உலக நாடுகளின் விருப்பத்திற்கிணங்க கொரோனா தடுப்பூசி மருந்து விரைந்து கண்டறியப்பட்டுள்ளது. பிராந்திய நாடுகளுக்கிடையேயான நட்புறவு தற்போது மேன்மையடைத்துள்ளது. நடப்பு நூற்றாண்டு நம் அனைவருக்கும் சாதகமாகவே இருக்கும். ஆனால் இது தெற்காசிய மற்றும் இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள நாடுகளின் ஒத்துழைப்பு இல்லாமல் சாத்தியமில்லை” எனவும் தெரிவித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தொடர்ந்து அவர் பிராந்திய நாடுகளுக்கிடையில் கொரோனா தடுப்பூசி பற்றிய தகவல் பரிமாற்றத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கூறினார். மேலும் “குறிப்பிட்ட இந்த 10 நாடுகளுக்கிடையில் விமான ஆம்புலன்ஸ் சேவையை துவங்க ஒப்பந்தம் செய்து கொள்ளலாமா??” என்றும் வினா எழுப்பினார். இந்த மாநாட்டில் வங்கதேசம், இலங்கை, மொரிஷியஸ், பூடான், பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான், செஷல்ஸ், மாலத்தீவு உள்ளிட்ட 10 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்தியாவின் சுகாதார செயலாளர் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் ஒவ்வொரு நாட்டின் சுகாதார செயலாளரும்,கொரோனா மேலாண்மை தொழிநுட்ப குழுவின் தொழில் நுட்ப தலைவர் என இருவர் பிரதிநிதிகளாக கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here