கூகிள் மேப்பால் காவல் நிலையத்திற்கு வழிமாறி சென்ற அஜித் – அலைமோதிய ரசிகர்கள்!!

0

கூகுள் மேப்பை நம்பி வந்த அஜீத் வழிமாறி சென்னை வேப்பேரியில் உள்ள காவல் நிலையத்துக்கு சென்றுள்ளார். அவரை அடையாளம் கண்ட பொதுமக்கள் அவருடன் இணைந்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.

காவல்நிலையம் வந்த நடிகர் அஜீத்

சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் ரைபள் கிளப்ஸ் துப்பாக்கி சுடும் பயிற்சி வகுப்பு ஒன்று இயங்கி வருகிறது. இந்த ரைபள் கிளப்ஸில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் நடிகர் அஜீத் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பயிற்சிக்கு செல்வதற்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள அவரது வீட்டிலிருந்து கால் டாக்சி மூலம் கிளம்பியுள்ளார் அஜீத். கூகுள் மேப் பயன்படுத்தி  இடத்துக்கு வர முயன்ற அஜீத் வழிமாறி சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஐபிஎல் மினி ஏலம் லைவ் அப்டேட்ஸ் -ஆஸ்திரேலிய வீரர் மெரிடித்தை 8 கோடிக்கு எடுத்த பஞ்சாப் கிங்ஸ்!!

அரைக்கால் சட்டையுடன் டிசர்ட் அணிந்து, தொப்பியுடன் வந்த அவரை தடுத்த காவல் அதிகாரிகள், அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. பின்பாக அவர் அணிந்திருந்த முகக்கவசத்தை கழட்டி, தான் வந்ததற்கான தகவலை கூறினார் நடிகர் அஜீத். இதன் பின்பாக காவல் அதிகாரிகளும், காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வந்த பொதுமக்களும் அவருடன் சேர்ந்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here