‘#freedomofthought’ மறுபடியும் சர்ச்சையை கிளப்பும் ஓவியா – ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!!

0

சர்ச்சைகளுக்கு சிரிதும் பஞ்சம் வைக்காதவர் நடிகை ஓவியா. கடந்த 14ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது #gobackmodi என்று ட்வீட் செய்து பரபரப்பை கிளப்பிய இவரின் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் இப்போது மீண்டும் #freedomofthought என்று ட்வீட் செய்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.

நடிகை ஓவியா:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோதும் சரி அதற்கு பிறகு நடித்த படங்களானாலும் சரி ஓவியா என்றாலே சர்ச்சைதான். மிகவும் வெளிப்படையான குணமுடைய இவருக்கு சோசியல் மீடியாவில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கடந்த 14ம் தேதி தமிழகம் வந்திருந்த மோடியை எதிர்த்து #gobackmodi என்ற ஹாஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டிங்கானது. இதனை ஓவியாவும் பதிவிட்டு மோடியின் வருகைக்கெதிரான தனது எதிர்ப்பினை பதிவு செய்திருந்தார்.

 

‘ஐபிஎல் மினி ஏலம்’ லைவ் அப்டேட்ஸ் – போனி ஆகாத மோஹித் சர்மா!!

இதனை கண்டித்தும் ஓவியாவின் ட்விட்டர் கணக்கை முடக்கவும், ஐபிசி 124(ஏ), 153(ஏ), 294 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யவும் சென்னை சிபிசிஐடி சைபர் க்ரைம் அலுவலகத்தில் பாஜ வழக்கறிஞர் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. “ஓவியாவின் பதிவில் உள்நோக்கம் இருக்கிறது. அரசு விழாவில் கலந்து கொள்ள வந்த பிரதமருக்கு எதிராக அவர் பதிவிட்டதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும்” என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தற்போது ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் #jaihind எனவும் #freedomofthought எனவும் (ஜனநாயகம் மற்றும் கருத்து சுதந்திரம்) பதிவிட்டுள்ளார். தனது கருத்துக்கு எழுந்த எதிர்ப்புகளை சுட்டிக்காட்டவே அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளதாக நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர். தற்போது ட்விட்டரில் இப்பதிவு வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here