செவ்வாயில் விண்கலத்தை தரை இறக்கி நாசா சாதனை – முதல் படம் வெளியீடு!!

0

தற்போது அனைத்து உலக நாடுகளும் செவ்வாயில் மனிதர்கள் வாழ முடியுமா என்று ஆராய்ந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து நாசா செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்பியது. தற்போது அது வெற்றிகரமாக செவ்வாயில் தரை இறங்கியுள்ளது.

நாசா:

பூமி மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற தன்மையை கொண்டது. அதேபோல் செவ்வாயில் மனிதர்கள் வாழ முடியுமா என்று உலக நாடுகள் பல ஆராய்ந்து வருகின்றன. மேலும் இதுவரை செவ்வாய்க்கு ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சீனா இந்த மாதத்தில் விண்கலத்தை அனுப்பியது. தற்போது இதனை தொடர்ந்து நாசாவும் அனுப்பியுள்ளது. செவ்வாயில் மனிதர்கள் வாழ முடியுமா என்று ஆராய்வதற்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாசா அதிநவீன தொழில் நுட்ப்போம் அடங்கிய PRESERVANCE விண்கலத்தை அனுப்பியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

 

சுமார் 7 மாதம் பயணத்திற்கு பின்பு தற்போது அந்த விண்கலம் செவ்வாயில் தரை இறங்கி உள்ளது. இந்நிலையில் விண்கலத்தில் இருந்து ரோபோடிக் ரோவர், ஜெஸிர பள்ளத்தில் இந்திய நேரப்படி அதிகாலை 2 மணிக்கு தரை இறங்கியது. அதுமட்டுமல்லாமல் இந்த ரோவர் விண்கலத்தில் இருந்து வெறும் 7 நிமிடத்தில் களமிறங்கியுள்ளது. பாராசூட்டை பயன்படுத்தி இதனை விஞ்ஞானிகள் தரை இறக்கினர். அங்கு இறங்கிய ரோவர் தற்போது அங்கு எடுத்த முதல் புகைப்படத்தை நாசாவுக்கு அனுப்பியது.

மாதிரிகள் சேகரிப்பு:

இந்த சாதனையை நாசாவில் விஞ்ஞானிகள் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். இந்த ரோவர் 6 சக்கரங்களை கொண்டது. மேலும் இது 5 மைல்கல் தூரம் வரை பயணித்து அங்குள்ள மாதிரிகளை சேகரிக்கும் தன்மையை உடையது. அங்கு கிடைக்கும் மாதிரிகளை வைத்து செவ்வாயில் உள்ள பல தகவல்களை அறிய முடியும் என்று கூறுகின்றனர். மேலும் இந்த ரோவரில் துளையிடும் வகையில் 7 அடி உள்ள நீளமான கருவி பொருத்தப்பட்டுள்ளது.

‘ஐபிஎல் மினி ஏலம்’ லைவ் அப்டேட்ஸ் – போனி ஆகாத மோஹித் சர்மா!!

இதேபோல் உள்ள மற்றொரு ரோவரை அங்கு சேகரித்த மாதிரிகளை வரும் 2031ம் ஆண்டு பூமிக்கு கொண்டு வர நாசா திட்டமிட்டுள்ளது. தற்போது இந்த ரோவர் ஒரு ஆண்டுக்கு அதாவது பூமியை பொறுத்தவரை 687 நாட்கள் அங்கு ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ளவுள்ளது. மேலும் வரும் காலத்தில் மனிதர்களை செவ்வாய்க்கு அனுப்பும் திட்டம் இருப்பதால் இந்த ரோவருடன் கார்பன்டை ஆக்ஸைடை ஆக்சிஜனாக மாற்றும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதனுடன் 2 கிலோ எடை கொண்ட குட்டி ஹெலிகாப்டரையும் அனுப்பியுள்ளனர். இதன் மூலம் நாசா பூமிக்கு வெளியே ஹெலிகாப்டர் பறக்கவிட்ட சாதனையும் படைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here