மீண்டும் தமிழகத்திற்கு வருகை தரும் மோடி – நலத்திட்டங்கள் துவக்கி வைப்பு!!

0
New Delhi, Sep 08 (ANI): Prime Minister, Narendra Modi addressing at the inauguration of the Patrika Gate in Jaipur, through video conferencing in New Delhi on Tuesday. (ANI Photo)

கடந்த 14ம் தேதி அரசுமுறை பயணமாக தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக மார்ச் 1ல் மீண்டுமாக தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகம் வரும் மோடி

கடந்த பிப்ரவரி 14ம் தேதி அரசுமுறை பயணமாக சென்னை வந்த பிரதமர் மோடி, மீண்டுமாக மார்ச் 1ம் தேதி சென்னை வரவுள்ளார். கடந்த 14ம் தேதி சென்னை வந்த மோடி பல்வேறு நலத்திட்டங்களைத் துவங்கி வைத்தார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தமிழகம் வந்த பிரதமர் மோடி சென்னை விம்ரோ நகர் மெட்ரோ ரயில் பணிகளை துவக்கி வைத்து, பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பாக ராமாநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்துக்கு இடையே 4500 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படவுள்ள இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை டெல்லியிலிருந்து காணொளி மூலம் துவங்கி வைத்தார் மோடி.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தொடர்ந்து சென்னை மணலியில் உள்ள பெட்ரோலிய கழக நிறுவனத்தின் பெட்ரோல் கந்தகம் அகற்றும் பிரிவை காணொளி மூலம் துவக்கி வைத்தார். பின்னர் நாகப்பட்டினம் பனங்குடியில் காவிரிப்படுகை அருகே 31 ஆயிரத்து 500 கோடிசெலவில் அமையவுள்ள சுத்திகரிப்பு ஆலைக்கு அடிக்கல் நாட்டினர் மோடி. மேலும் வரும் மார்ச் 1ம் தேதி பிரதமர் மோடி மீண்டுமாக சென்னை வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை வரும் மோடி தமிழகத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளதாகவும், பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மோடியின் சென்னை வருகையை ஒட்டி வரும் 25ம் தேதி முதல் கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here