‘குக் வித் கோமாளி’ பாபா பாஸ்கர் மாஸ்டருக்கு நடந்த சோகம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று வரும் பாபா பாஸ்கர் மாஸ்டர் சமூகவலைதளத்தில் தற்போது ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அவரது பதிவைக்கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

பாபா பாஸ்கர் மாஸ்டர்

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு வருபவர் பிரபல திரைப்பட நடன அமைப்பாளர் பாபா பாஸ்கர் மாஸ்டர். இவர் குக் வித் கோமாளி செட்டில் அடிக்கும் லூட்டிகள் ஏராளம். கோமாளிகளுடன் சேர்ந்து அவர்களுக்கு இணையாக காமெடியில் போட்டி போடுபவர் பாபா பாஸ்கர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அனைவரையும் மரியாதையுடன் நடத்துவதில் இவருக்கு நிகர் இவரே. இவருடன் சமையல் செய்வதென்றால் கோமாளிகளுக்கு அவ்வளவு பயம். குறிப்பாக சொல்லப்போனால் கோமாளி புகழுக்கும் பாபா பாஸ்கருக்கும் ஆகவே ஆகாது.

ஒரு சில நேரங்களில் இதில் யார் குக், யார் கோமாளி என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இவர் செய்யும் அட்டகாசங்கள் அதிகம். ஆனாலும் சமையல் என்று வந்தால் பாஸ்கர் கில்லாடி தான். அந்தளவுக்கு சமையலில் அசத்திவிடுவார் பாஸ்கர் மாஸ்டர். இந்நிலையில் பாபா பாஸ்கர் மாஸ்டர் தனது ரசிகர்களுக்கு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

செவ்வாயில் விண்கலத்தை தரை இறக்கி நாசா சாதனை – முதல் படம் வெளியீடு!!

அந்த பதிவில், ‘எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை யாரோ ஹேக் செய்து விட்டனர். ரசிகர்கள் எனது நிறை குறைகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் தெரிவித்து வருவார்கள். அதெல்லாம் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும். அது யாருக்கோ பிடிக்கவில்லை. அதனால் எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஹேக் செய்துள்ளனர். அவர்கள் நன்றாக இருக்கட்டும். மீண்டுமாக இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு வருவேன்’ என கூறியுள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here