தமிழகத்தில் சதத்தை நெருங்கும் பெட்ரோலின் விலை – வேதனையில் ஓட்டுனர்கள்!!

0

தற்போது இந்தியாவில் சில மாநிலங்களில் பெட்ரோலின் விலை சதம் அடித்துள்ளது. இதனை தெடர்ந்து தமிழகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் பெட்ரோல் விலை சதம் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இன்றைய நிலவரப்படி பெட்ரோல் மற்றும் டீசலின் விலை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் இன்றைய நிலவரம்:

கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலையில் ரு.100 ஐ தாண்டியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 2017ம் ஆண்டு முதல் தான் எண்ணெய் விலையின் நிலவரத்திற்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை நாள்தோறும் மாற்றி அமைத்து வந்தனர். இதனை முன்னணி எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்வர். மேலும் இந்த புதிய விலை அன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வரும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் பெட்ரோல் விலையில் சதத்தை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் லிட்டருக்கு 27 காசுகள் உயர்ந்து தற்போது ரூ.92.25 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் டீசல் நேற்றைய விலையில் இருந்து 32 காசுகள் உயர்ந்து தற்போது ரூ.85.63 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

செவ்வாயில் விண்கலத்தை தரை இறக்கி நாசா சாதனை – முதல் படம் வெளியீடு!!

தொடர் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் தற்போது வாகனத்தை பயன்படுத்துவதற்கு நடுக்கம் கண்டு வருகின்றனர். மேலும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரி தான் காரணம் என்று கூறுகின்றனர். மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் வரியை குறைக்குமாறு மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here