மறைந்த காங்கிரஸ் நிர்வாகியின் உடலை சுமந்து சென்ற ராகுல் காந்தி – வைரலாகும் புகைப்படம்!!

0

மறைந்த காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஒருவரின் உடலை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சுமந்து சென்றதாக வெளியான புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நிர்வாகியின் உடலை சுமந்த ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மூத்த தலைவரான சதீஷ் சர்மா நேற்று முன்தினம் கோவாவில் கலாமானார். 73 வயதான சதீஷ் சர்மா 1993-1996 வரை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்தவர். முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பராகவும் இவர் இருந்துள்ளார். இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக கோவாவில் மறைந்த சதீஷ் சர்மாவின் உடலை அடக்கம் செய்வதற்காக, தற்போதைய காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் ராகுல் காந்தி தனது தோளில் அவரது உடலை சுமந்து சென்றுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கல்வான் பள்ளத்தாக்கு மோதல் – 5 வீரர்கள் உயிரிழந்ததை ஒப்புக்கொண்ட சீன ராணுவம்!!

முன்னதாக சதீஷ் ஷர்மாவின் மறைவு குறித்து ராகுல் வெளியிட்ட இரங்கல் பதிவில், ‘கேப்டன் சதீஷ் சர்மா இறந்ததை நினைத்து வருத்தப்படுகிறேன். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது அன்பையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது இழப்பை உணர்ந்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவராயிருந்தாலும், மிகப்பெரிய பதவிகளை வகித்தவராயிருந்தாலும் ராகுல் காந்தியின் எளிமை மக்களால் பெரிதும் கவரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here