Thursday, May 2, 2024

பிறந்து 14 நாட்கள் ஆன குழந்தையுடன் கொரோனா களப்பணி – உ.பி., பெண் ஆட்சியர் அசத்தல்!!

Must Read

கொரோன பரவல் அச்சம் காரணமாக அனைத்து அரசு ஊழியர்களும் தங்களது சொந்த பிரச்சனைகளையும் மறந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தின் பெண் ஆட்சியர் ஒருவர் பிரசவம் முடிந்து 14 நாட்களில் பணிக்கு திரும்பியுள்ளது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

கொரோனா கால களப்பணியாளர்கள்:

கடந்த டிசம்பர் மாதம் கொரோனா என்ற வைரஸ் தொற்று நோய் உலக நாடுகள் அனைத்திற்கும் பரவியது. அதனை தொடர்ந்து மத்திய அரசால் பொது முடக்கமும் அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வெளியே வரும் நிலை குறைந்தது. ஆனால், கொரோனா கால களப்பணிக்காக அரசு அதிகாரிகள், ஊழியர்கள் என்று அனைவரும் மக்களுக்காக பணிபுரிந்து வந்தனர். ஆனால், இன்னும் கூட இந்த கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

ஆனாலும், அரசு அதிகாரிகள் தற்போது வரை முகம் சுளிக்காமல் தங்களது பணிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர். இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்தில் சௌமியா பாண்டே துணை ஆட்சியராக பணிபுரிந்து வருகின்றார். இவர் கொரோனா பரவல் ஆரம்பித்த காலத்தில் இருந்தே இரவு பகலாக பணியாற்றி வருகின்றார். கொரோனா காலம் என்பதால் அவர் நோடல் அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார். இவர் இந்த நிலையில் கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இளம் தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டு:

அரசு அதிகாரிகளை பொறுத்தவரை ஆறு மாத காலம் வரை மகப்பேறு விடுமுறை எடுக்கலாம். ஆனால், இவர் எந்த ஒரு விடுமுறையும் எடுக்கவில்லை. கடந்த 2 வாரங்களுக்கு முன் தான் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து 14 நாட்களில் அவர் கொரோனா கால களப்பணிக்கு திரும்பியுள்ளார். தனக்கு கடமை அதிகமாக உள்ளது என்பதனை உணர்ந்து தனது பிறந்து 14 நாட்கள் ஆன கைக்குழந்தையுடன் பணி செய்து வருகின்றார்.

தமிழகத்தில் அக். 25 முதல் வடகிழக்கு பருவமழை துவங்கும் – வானிலை மையம் அறிவிப்பு!!

இவரது சேவை குறித்து மக்கள் நெகிழ்ந்து போய் உள்ளனர். இது குறித்து அவர் கூறுகையில் “கடவுள் பெண்களுக்கு குழந்தை பெற்றடுக்கும் வலிமையை கொடுத்துள்ளார். குழந்தை பிறந்ததும் பணி பற்றி யோசித்தேன். இந்த சூழ்நிலையில் கடமைகள் அதிகமாக உள்ளது என்பதனையும் உணர்தேன். அதனால், பணிக்கு திரும்பி விட்டேன்” என்று கூறியுள்ளார். இளம் தலைமுறைக்கு சௌமியா பாண்டே ஒரு எடுத்துக்காட்டாக இருப்பார் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

அரசு ஊழியர்களே., அகவிலைப்படியோடு இந்த கொடுப்பனவும் உயர்வு? DoP&T வெளியிட்ட முக்கிய தகவல்!!!

7வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -