தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு..? மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை..!

0
cmo of tamilnadu
cmo of tamilnadu

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வரும் நிலையில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டி விட்டது. உயிரிழப்புகளும் இரட்டை இலக்கத்தில் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் குறிப்பாக தலைநகர் சென்னையை மையமாக வைத்து கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்தை தாண்டி விட்டது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

விமானம் & ரயிலில் பயணிக்க ஆரோக்ய சேது செயலி கட்டாயமா..? மத்திய அரசு விளக்கம்..!

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் அடுத்தகட்டமாக தளர்வுகள் வழங்குவது குறித்தும் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு வரும் ஜூன் 30ம் தேதி முடிவடைய உள்ள நிலையில் அடுத்தும் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டிக்கலாமா என்பது குறித்தும் திங்கட்கிழமை (ஜூன் 15) தலைமை செயலகத்தில் காலை 11 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here