இந்தியாவில் 3 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு – 1.5 லட்சம் பேர் குணமடைந்தனர்..!

0
corona virus cases in india
corona virus cases in india

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. மேலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு

சீனாவில் இருந்து பரவிய கொரோனா தற்போது உலக நாடுகள் அனைத்தும் பரவி வருகிறது. உலக பணக்கார நாடுகளையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. தற்போது இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனாவால் இந்தியாவில் மார்ச் 24 முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

corona virus cases
corona virus cases

தற்போது சில தளர்வுகளுடன் ஜூன் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகளாலும், மக்கள் நடமாட்டம் அதிகரிப்பதாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் அதில் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது ஆறுதலை அளிக்கும் விஷயமாக உள்ளது.

மத்திய சுகாதார துறை

மத்திய சுகாதார துறை இன்று வெளியிட்ட தகவல் படி இந்தியாவில் 308993 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 386 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8884 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 154330 ஆக உள்ளது. நாடு முழுவதும் 145779 சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு..? மருத்துவ நிபுணர்களுடன் முதலவர் ஆலோசனை..!

helth and welfare
helth and welfare

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 101141 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 40698 பேருக்கும், டெல்லியில் 36824 பேருக்கும், குஜராத்தில் 22527 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here