Friday, May 17, 2024

எல்லையில் பதற்றத்தை தணிக்க ஐந்து அம்ச திட்டம் – இந்தியா மற்றும் சீனா ஒப்பந்தம்!!

Must Read

லடாக் எல்லை பிரச்சனையை தீர்ப்பதற்காக இந்தியா மற்றும் சீனா இடையே ஐந்து அம்ச திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் இதில் கூறப்பட்டுள்ள அம்சங்களை இரு நாட்டு ராணுவ வீரர்களும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய – சீன பிரச்னை:

கடந்த 5 மாதங்களாக இந்திய – சீன எல்லைப் பிரச்னை நடந்து வருகின்றது. இரு நாட்டு வீரர்களும் அடிக்கடி மோதலில் இறங்கி வருவதால் எல்லையில் பதற்றம் நிலவி வந்தது. இதனை தீர்க்கும் பொருட்டு இரு நாட்டு பாதுகாப்பு அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் தான் நம் நாட்டின் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சீன நாடு பாதுகாப்புத்துறை அமைச்சர் வெய் பெங்கியும் மாஸ்கோவில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

india china ladaak border
india china ladaak border

இதனை தொடர்ந்து, மத்திய வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்யியும் ஆலோசனை நடத்தினர். அதில் அவர்கள் முடிவாக ஐந்து அம்ச திட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.

முதல்வர், துணை முதல்வருக்கு கொரோனா பரிசோதனை!!

இருதரப்பு அமைச்சர்கள் ஏற்றுக்கொண்ட கூட்டறிக்கையை நேற்று செய்தியாளர்களுக்கு வெளியிட்டனர். அதில் 5 அம்சங்கள் வீரர்களுக்காக கூறப்பட்டுள்ளன. இதன் மூலமாக இருநாட்டுக்கும் இடையே எல்லைப் பிரச்னை தீர்க்கப்படும் என்று நம்பப்படுகிறது.

ஐந்து அம்ச திட்டம்:

  • அமைதி, சமாதானம் போன்றவை நிலவும் வகையில் இரு தரப்பு வீரர்களும் நடந்து கொள்ள வேண்டும். எல்லையில் நிலைமையை சீராக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
  • எந்த பிரச்சனையையும் பேச்சுவார்த்தை மூலமாக தீர்ப்பதற்கு தான் முயல வேண்டும்.
  • இருதரப்பில் இருந்து வகுக்கப்பட்ட ஒப்பந்தங்களை அனைவரும் மதிக்க வேண்டும். கொள்கைகளை பின்பற்ற வேண்டும்.
  • பதற்றம் ஏற்படாத வகையில் தான் வீரர்கள் எல்லையில் ரோந்து செல்ல வேண்டும்.
  • எல்லையில் அமைதி நிலவ வீரர்கள் மற்றும் இரு நாட்டு அரசுகளும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த ஐந்து அம்ச திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இருதரப்பும் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூடிய விரைவில் நமது அண்டை நாடான சீனாவுடன் சமாதானம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே., பாமாயில் & துவரம் பருப்பு கிடைப்பதில் சிக்கலா? அரசு வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல் பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் பல்வேறு ரேஷன் கடைகளிலும்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -