Monday, April 29, 2024

கோவில் நிலங்களை பிற காரியங்களுக்கு பயன்படுத்த கூடாது – உயர்நீதிமன்றம் உத்தரவு!!

Must Read

தமிழகத்தில் உள்ள கோவில் நிலங்களை கோவில் பயன்பாடு தவிர்த்து மற்ற காரியங்களுக்கு பயன்படுத்த கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆணையாளர்கள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அறிக்கையினை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கோவில் நிலங்கள்:

தமிழகத்தில் பல பாரம்பரியமான கோவில்கள் பல உள்ளன. கோவில் நிலங்கள் என்று கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமாக பல ஏக்கர் நிலங்கள் தமிழகத்தில் இருந்துள்ளது. அதனை கோவில் விழாக்கள் மற்றும் பிற காரியங்களுக்காக கோவில் நிர்வாகம் பயன்படுத்தி வந்தது. ஆனால், தமிழகத்தில் உள்ள சில கோவில்களில் கோவில் சம்மதம் அல்லாத சில காரியங்களுக்காக கோவில் நிலங்கள் பயன்படுத்தப்பட்டன.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

குறிப்பாக, சென்னை நீலாங்கரையில் உள்ள சக்தி முத்தம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் அறநிலையத்துறையின் அனுமதி இல்லாமல் 70 வருடங்களுக்கு முன்பே தமிழக மீன்வளத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது மீன்வளத்துறை இந்த நிலத்தில் மீன் அங்காடி அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது.

உயர்நீதிமன்றம் தீர்ப்பு:

அதே போல் சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவில் சொந்தமான இடத்தில் அறநிலையத்துறை அனுமதி இல்லாமல் ஆர்டிஓ அலுவலகம் அமைக்க வழங்கப்பட்டது. இதன் காரணமாக கோவில் நிலங்களை மற்ற காரியங்களுக்கு பயன்படுத்த கூடாது என்றும் இதனை தடுக்க வேண்டும் என்றும் வி.பி.ஆர்.மேனன், ஏ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கினை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரணை மேற்கொண்டு இன்று தீர்ப்பளித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தீர்ப்பில் கூறப்பட்டதாவது, “கோவில் நிலங்களை கோவில் சமபதமான காரியங்களுக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். கோவில் நிலங்களை குத்தகைக்கு எடுத்திருப்பவர்கள் தகுந்த கட்டணத்தை முறையாக கோவில் நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும். கோவில் அல்லாத பிற காரியங்களுக்கு மாற்ற கூடாது, அரசு அதற்கு துணை போகவும் கூடாது”

“கோவில் நிலங்கள் சுபவிழாக்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். கோவில் நிலங்களை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து ஆணையாளர் குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிக்கையினை தாக்கல் செய்ய வேண்டும்.” இவ்வாறாக தீர்ப்பளித்துள்ளார். இதனால் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்க அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

செப் தாமு vs வெங்கட் பட்.., இவர்களுக்கு இடையே இருக்கும் சீக்ரட்.., முழு ஆதரவும் இவருக்கு தான்!!

விஜய் டிவியில் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் குக் வித் கோமாளி சீசன் 5 இனிதே தொடங்கிய நிலையில், முக்கிய பிரபலங்கள் சிலர் கலந்து கொள்ளாதது பலரையும்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -