முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் – நாளை தொடக்கம்!!

0

தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி தமிழக முதல்வர் பழனிச்சாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.

நாளை துவங்கும் அமைச்சரவை கூட்டம்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் முதல் இரண்டு வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது போல, நாளை பிப்ரவரி 13ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக அரசின் சார்பில், பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. சட்டமன்ற தேர்தலை ஒட்டி தாக்கல் செய்யப்படவுள்ள இடைக்கால பட்ஜெட்டில் சில முக்கியமான அறிவிப்புகள் இடம் பெற்றிருக்கிறது என தகவல்கள் வெளிவந்துள்ளன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஐபிஎல் மினி ஏலம் – ஸ்ரீசாந்தை எடுக்க முன்வராத அணிகள்!!

இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் பெண்களுக்கு உதவி செய்யும் வகையில் 110 விதியின் கீழ் பல்வேறு சலுகைகள் மற்றும் நலத்திட்டங்களை முதல்வர் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக, அனைத்து கட்சிகளிடமும் ஒப்புதல் கேட்பதற்கு நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் காலை 11.30 மணியளவில் தலைமை  செயலகத்தில் முதல்வர் பழனிச்சாமி தலைமையில் நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here