கிராம சபை கூட்டம் ரத்து – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!!

0

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டது. இதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. அதற்கு தற்போது சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசை பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

கிராம சபை கூட்டம்:

ஆண்டு தோறும் 4 முறை இந்த கிராம சபை நடத்தப்படும். ஜனவரி 26ம் தேதி, மே 1ம் தேதி, ஆகஸ்ட் 15ம் தேதி மற்றும் அக்டோபர் 2ம் தேதி ஆகிய 4 நாட்களில் கிராமங்களில் இந்த கிராம சபை கூட்டம் நடைபெறும். இது கிராம ஊராட்சி மன்ற தலைவர்களால் நடத்தப்படும். இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் வெளிப்படை தன்மை, பொறுப்புணர்வு ஊக்குவித்தல், வளர்ச்சி திட்டங்களை திட்டமிடுதல் ஆகியவை செய்வதே இந்த கூட்டத்தின் நோக்கமாகும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் ஒரு கிராம சபை கூட்டத்தில் அந்த பகுதியில் மதுக்கடை இயங்கக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டால், அந்த கிராமத்தில் மது கடைகள் இயங்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு கிராம சபை கூட்டத்தை தமிழக அரசு தடை செய்தது. இதற்கு திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஐபிஎல் மினி ஏலம் – ஸ்ரீசாந்தை எடுக்க முன்வராத அணிகள்!!

மேலும் இந்த கட்சியினர் இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கூறியதாவது, இது தொடர்பாக தமிழக அரசு விரைவில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் ஒரு வாரத்திற்குள் அரசு பதில் மனுவை சமர்பிக்கவிட்டால், பதில் மனு இல்லாமலே வழக்கு விசாரிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசுக்கு அவகாசத்தை அளித்த நீதிமன்றம் இந்த வழக்கை அடுத்த 2 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here