Friday, May 17, 2024

இந்தியா – இங்கிலாந்து இடையே டிச.31 வரை விமான போக்குவரத்துக்கு தடை!!

Must Read

இங்கிலாந்தில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளதால் அங்கு இருந்து டெல்லிக்கு விமானங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் தற்போது கொரோனா வைரஸ் வேறு விதமாக உருமாறி வேகமாக பரவி வருகின்றது.

கொரோனா வைரஸ்:

கடந்த டிசம்பர் 2019 ஆம் ஆண்டு சீனாவின் உஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா என்ற வைரஸ் பரவியது. இந்த வைரஸ் தற்போது உலகில் உள்ள அனைத்து மக்களையும் அடிப்படைத்து வருகின்றது. தற்போது வரை இந்த நோய் தொற்றிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் வேறுவிதமாக உருமாறி பரவி வருகின்றது. இந்த பரவல் அதிகளவு பாதிப்பினை ஏற்படுத்தவில்லை என்றாலும் வேகமாக பரவி வருவதாக பிரிட்டன் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து அங்கு மூன்றடுக்கு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் கடுமையான பொது முடக்க விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொது இடங்களில் மக்கள் சந்திக்க கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் பரவல் குறித்த ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர் என்றும் இங்கிலாந்து அரசு தெரிவித்தது.

கொரோனாவால் காங்கிரஸ் மூத்த தலைவர் மரணம் – தலைவர்கள் இரங்கல்!!

இங்கிலாந்தில் இப்படியாக நோய் பரவுவதால் இந்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்கள் வருவதற்கு தடை விதித்துள்ளது. தற்காலிகமாக விமான போக்குவரத்து சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 22 (நாளை) நள்ளிரவு முதல் வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை போக்குவரத்து சேவைகள் நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அறிவுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி பிரிவது கன்பார்ம் தானா?? அதிர வைக்கும் முக்கிய தகவல்!!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டிலும் ஜொலித்து வருபவர் தான் ஜிவி பிரகாஷ் குமார். தற்போது இவர் இடிமுழக்கம், 13 போன்ற படங்களில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -