சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவினால் ரூ.5 லட்சம் பரிசு – மத்திய அமைச்சகம் அறிவிப்பு!!

0

சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவியவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்துக்கு மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அசத்தல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

சாலை பாதுகாப்பு வாரவிழா:

சாலை விபத்துகளை தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் ஆண்டுதோறும் சாலை விபத்துகள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. மேலும் வரும் ஜனவரி மாதம் 18ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரமாக கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளது. கடந்த காலங்களில் வெறும் சம்பிரதாயமாக நடக்கும் இவ்விழா தற்போது அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெறும். இதற்காக அனைத்து மாநில போக்குவரத்து அதிகாரிகளுக்கும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, இந்த ஆண்டு சாலை பாதுகாப்பு விழா 1 மாதம் நடத்துவதற்காக திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதற்காக பல்வேறு துறையின் இயக்குனர்கள் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். வரும் ஜனவரி 18, 19 ஆம் தேதிகளில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் இந்த விழிப்புணர்ச்சி விழாவை துவக்கி வைக்கிறார்.

கொரோனாவால் காங்கிரஸ் மூத்த தலைவர் மரணம்!!

மேலும் வரும் ஜனவரி மாதம் 20 மற்றும் 25 ஆம் தேதிகளில் அனைத்து மாநில எம்.எல்.ஏ மற்றும் எம்பிக்கள் சாலையில் நடைபயணம் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவார். இந்த நடைப்பயணத்தில் மருத்துவர்கள் மாறும் காவல்துறையினர் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சாலை பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட மூவருக்கு பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இந்த பரிசு சாலையில் விபத்துக்குள்ளானோர்களின் உயிர்களை காப்பற்றுபவர்களை கவுரவிக்கும் வகையில் வழங்கப்படும். அதற்கான பரிசுத்தொகையையும் அறிவித்துள்ளார்கள். முதல் பரிசாக ரூபாய் 5 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூபாய் 2 லட்சமும் மற்றும் மூன்றாம் பரிசாக ரூபாய் 1 லட்சமும் வழங்கப்படும் .

மேலும் விபத்துக்குள்ளானவர்களுக்கு உதவியவர்களிடம் தங்களது பெயர், முகவரி போன்றவற்றை கேட்டு துன்புறுத்தக் கூடாது என்று மருத்துவர்கள் மற்றும் போலீசார்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here