புதிய வகை கொரோனாவை பற்றி மக்கள் அச்சம் அடைய வேண்டாம் – சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!!

0

இங்கிலாந்தில் பரவிவரும் புதிய வகை கொரோனாவை பற்றி இந்திய மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

புதிய வகை கொரோனா:

கொரோனா என்னும் கொடிய வைரஸ் தாக்கத்தில் இருந்து இப்பொழுது தான் நாம் மீண்டு வருகிறோம். ஆனால் தற்போது இங்கிலாந்தில் நடக்கும் சம்பவத்தால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்நாட்டில் புது வகையான உருமாற்று கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. முன்பு பரவிய வைரஸை விட இதன் பரவும் விகிதம் 70 சதவீதம் அதிகமாக உள்ளது என்று கூறப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இங்கிலாந்தில் நேற்று முதல் இம்மாதம் இறுதி 31 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டு இங்கிலாந்து முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட முடியாது என்பது வருத்தத்துக்குரியதே.

பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்:

புதிய வகை கொரோனா பரவலை கண்டு மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, புதிய வகை கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது, மேலும் இதற்காக மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். தற்போதைய காலத்தில் பொய்யான தகவல்களும், அச்சமும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவினால் ரூ.5 லட்சம் பரிசு !!

இந்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மிகவும் சிறப்பாக எடுத்தது, அதேபோல் தற்போது மேற்கொள்ளும் எனவே யாரும் அச்சப்பட தேவையில்லை. இந்த புதிய வகை உருமாற்றம் பெற்ற வைரஸ் இந்தியாவிற்குள் வராமல் தடுப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்க இன்று கூட்டம் நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here