Saturday, May 18, 2024

சுவையான “பிரட் பீஸ்ஸா” ரெசிபி – செஞ்சு அசத்துங்க!!

Must Read

குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஸ்னாக்ஸ் கொடுக்கணுமா அப்போ “பிரட் பீஸ்ஸா” செஞ்சு அசத்துங்க..அதற்கு தேவையான பொருட்களும் குறைவு தான், நேரமும் குறைவு தான்.. சூப்பரான ரெசிபி இதோ..

தேவையான பொருட்கள்:

  • பிரட் – 4
  • மோஸ்ரெல்லா சீஸ் – 100 கிராம்
  • குடைமிளகாய் – 1 பொடியாக நறுக்கியது ( உங்களுக்கு பிடித்த வேறு வேறு கலர்களில் எடுத்து கொள்ளுங்கள்)
  • சோள விதைகள் – கொஞ்சமாக
bread pizza ingredients
bread pizza ingredients
  • ஆலிவ் விதைகள் – கொஞ்சமாக
  • வெண்ணை – தேவையான அளவு
  • இத்தாலியன் சீசனிங் – (பிடித்தால் சேர்த்துக்கொள்ளலாம்)
  • பீஸ்ஸா சாஸ் – தேவையான அளவு

செய்முறை:

  • பிரட் துண்டுகளில் உள்ள ஓரங்களை நறுக்கி விடுங்கள்.
  • பிரட் துண்டுகளை உங்களுக்கு பிடித்த வடிவங்களில் கூட வெட்டி கொள்ளலாம்.
  • முதலில், சாஸ் ப்ரெட்டில் நன்றாக தடவுங்கள், அதற்கு மேல் குடைமிளகாய், ஒலிவ் விதைகள், சோள விதைகள் வையுங்கள்.
  • அதன் பின் உங்களுக்கு எவ்வளவு சீஸ் வேணுமோ அதனை அதன் மேல் போட்டு கொள்ளுங்கள்.
  • ஒரு pan எடுத்து அடுப்பில் வையுங்கள் சூடு ஆனதும் வெண்ணை இட்டு அதில் நாம் தயாரித்து வைத்த பிரட் துண்டுகளை வைத்து ஒரு மூடி போட்டு மூடிக்கொள்ளுங்கள்.
  • சீஸ் நன்றாக உருகும் வரை வைத்து விட்டு எடுத்து விடுங்கள்.
சூப்பரான “பிரட் பீஸ்ஸா” ரெடி!!

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட இலங்கை மீனவர்கள்., நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

நீண்டகாலமாக தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -