தமிழக சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!

0

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக கட்சி தற்போது தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. முதல் கட்டமாக தற்போது 17 வேட்பாளர்கள் பெயரை அறிவித்துள்ளது.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக கட்சி அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து களமிறங்கவுள்ளது. இந்த தேர்தலுக்கு பாஜக கட்சிக்கு அதிமுக கட்சி 20 தொகுதி மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியை வழங்கியுள்ளது. அதன்படி தற்போது பாஜக கட்சி தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. முதல் கட்டமாக 17 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. மீதமுள்ள 3 தொகுதி வேட்பாளர்கள் தகவல் விரைவில் வெளியாகும் என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

பாஜக வேட்பாளர் பட்டியல்:

திருக்கோவிலூர் தொகுதியில்-கலிவரதன், விருதுநகர் தொகுதியில்-பாண்டுரங்கன், ராமநாதபுரம் தொகுதியில்-குப்புராமு, திருநெல்வேலி தொகுதியில்-நயினார் நாகேந்திரன், குளச்சல் தொகுதியில்-ரமேஷ், மதுரை வடக்கு தொகுதியில்-டாக்டர் சரவணன், திருவையாறு தொகுதியில்-பூண்டி வெங்கடேசன், திட்டக்குடி(தனி) தொகுதியில்-பெரியசாமி.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் சூடுபிடிக்க துவங்கும் தேர்தல் களம் – எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் இன்று வேட்பு மனு தாக்கல்!!

  • மொடக்குறிச்சி தொகுதியில்-சரஸ்வதி
  • திருவண்ணாமலை தொகுதியில்-தணிகைவேல்
  • துறைமுகம் தொகுதியில்-வினோஜ் பி.செல்வம்
  • ஆயிரம் விளக்கு தொகுதியில்-குஷ்பு
  • நாகர்கோவில் தொகுதியில்-எம்.ஆர்.காந்தி
  • அரவக்குறிச்சி தொகுதியில்-அண்ணாமலை
  • காரைக்குடி தொகுதியில்-ஹெச்.ராஜா
  • கோவை தெற்கு தொகுதியில்-வானதி சீனிவாசன்
  • தாராபுரம்(தனி) தொகுதியில்-எல்.முருகன்

இவர்கள் அந்தந்த தொகுதிகளில் போட்டியிடவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here