ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான தமிழக வீராங்கனை – குவியும் வாழ்த்துக்கள்!!

0

ஜப்பான் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி பங்கு பெறவுள்ளார். இவர் வாள் வீச்சில் பங்குபெறும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

ஒலிம்பிக்:

கொரோனா காலத்திற்கு பின்பு தற்போதும் அனைத்து துறை விளையாட்டு போட்டிகளும் மிக சிறப்பாக நடைபெறும் வருகிறது. இந்நிலையில் வருகிற ஜூலை மாதத்தில் ஜப்பான் நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மிக விரைவாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கு தற்போது தமிழக வீராங்கனை பவானி தேவி தேர்வாகியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர் வாள் வீச்சு போட்டியில் கலந்துகொள்ள உள்ளார். இதன்மூலம் வாள் வீச்சு விளையாட்டில் கலந்துகொள்ளும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். இவர் வாள்வீச்சில் உலக தரவரிசை பட்டியலில் 45வது இடத்தில் உள்ளார். 27 வயதுடைய பவானி தேவி சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர். இவர் பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளார்.

சர்வதேச டி 20 போட்டி – கேப்டன் விராட் கோலியின் புதிய சாதனை!!

பெல்ஜியத்தில் கடந்த 2019ம் ஆண்டில் நடைபெற்ற உலக கோப்பை வாள் வீச்சு போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை கைப்பற்றி அசத்தினார். மேலும் ஹங்கேரியில் நடைபெற்று வரும் வாள் வீச்சு போட்டியில் இவர் காலிறுதி போட்டியில் தோல்வியை தழுவினார். இந்நிலையில் இவர் Adjust Official Ranking என்ற வழிமுறை படி ஒலிம்பிக் போட்டியில் தேர்வாகியுள்ளார். இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர். ஒலிம்பிக் போட்டிக்காக தற்போது பவானி தேவி ஹங்கேரியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here