சர்வதேச டி 20 போட்டி – கேப்டன் விராட் கோலியின் புதிய சாதனை!!

0

நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான கோஹ்லியின் அதிரடியான ஆட்டம் மூலம் சர்வதேச டி 20 போட்டியில் கோஹ்லி தற்போது புதிய சாதனை படைத்துள்ளார். இதனால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக இருந்து வருகிறது.

விராட் கோஹ்லி

இந்தியாவிற்கு வந்த இங்கிலாந்து அணியினர் தற்போது டி 20 தொடர்களை விளையாடி வருகிறது. ஏற்கனவே டெஸ்ட் தொடரை இழந்த நிலையில் டி 20 தொடரை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் டி 20 போட்டியை அதிரடியாக வென்றது. இந்நிலையில் இரு அணிகளுமான இரண்டாவது டி 20 போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் அசத்தலாக விளையாடிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதன் மூலம் தற்போது இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி விராட் கோஹ்லி 73 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவர் நேற்று அடித்த அரைசதம் மூலம் சர்வதேச டி 20 போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இவருக்கு டி 20 போட்டிகளில் 3000 ரன்களை கடக்க 72 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் இவர் நேற்றைய போட்டியில் 73 ரன்களை குவித்து அசத்தினார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

இதன்மூலம் டி 20 போட்டிகளில் 3000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை கோஹ்லி பெற்றுள்ளார். தற்போது இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமாக இருந்து வருகிறது. இவருக்கு அடுத்த படியாக அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் கப்டில் 2,839 ரன்கள் 2வது இடத்திலும், ரோஹித் சர்மா 2,773 ரன்கள் 3வது இடத்திலும் உள்ளனர். மேலும் நேற்றைய போட்டியின் மூலம் சர்வதேச போட்டிகளில் அறிமுகமான இஷான் கிஷன் முதல் போட்டியிலே அரைசதம் அடித்து அனைவரின் கவனத்தியும் ஈர்த்தார். தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்குமான மூன்றாவது போட்டி நாளை நடக்கவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here