இன்றும் நாளையும் வங்கிகள் ஸ்ட்ரைக் – காசோலை பரிவர்த்தனை நடைபெறுவதில் சிக்கல்!!

0

மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து பொதுத்துறை வங்கிகள் இன்று மற்றும் நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதனால் காசோலை பரிவர்த்தனை வர்த்தகம் ஏற்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

வங்கி:

கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி அன்று மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். மேலும் பல்வேறு துறைகளை தனியார் மயமாக்கும் திட்டங்களையும் அறிவித்தார். அதில் ஒன்று தான் இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது. இதற்கு நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது மத்திய அரசின் இந்த அறிவிப்பை கண்டித்து பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று மற்றும் நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். ஏற்கனவே சனி மற்றும் ஞாயிற்றுகிழமை வங்கிகளுக்கு விடுமுறை தற்போது திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை வங்கிகள் ஸ்ட்ரைக் என்றால் தொடர்ந்து 4 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாமல் இருப்பதால் மக்கள் மிகவும் பாதிக்கப்படவுள்ளனர். நாடு முழுவதும் நடைபெறவுள்ள இந்த போராட்டத்தில் 9 லட்ச வங்கி ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

அதில் தமிழகம் சார்பாக 60 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். அதுமட்டுமல்லாமல் நாடு முழுவதும் 88 ஆயிரம் வங்கிகளும், தமிழகத்தில் 14 ஆயிரம் வங்கிகளும் மூடப்படவுள்ளது. தற்போது வங்கிகளின் வேலை நிறுத்தம் காரணாமாக சுமார் ரூ.75 ஆயிரம் மதிப்பிலான காசோலை பரிவர்த்தனை வர்த்தகம் பாதிக்கப்படவுள்ளது. இதனால் மக்கள் பாதிப்பு அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் தனியார் வங்கிகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் அனைத்து ஏடிஎம் மையங்களிலும் முழு அளவில் செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here