தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு – ஆன்லைனில் விண்ணப்பிக்க மத்திய அரசு அனுமதி!!

0

இந்த ஆண்டிற்கான தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை மக்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு

கடந்த 2020ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் கொரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டுமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் துவங்க உள்ளது. இந்தியாவில் பெருகி வரும் கொரோனா பெருந்தொற்றால் இந்த பணிகள் ஆன்லைன் வழியாக நடத்தப்படவுள்ளன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதற்கான சிறப்பு செயலி ஒன்றை தயாரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய வகை தேசிய மக்கள் கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட வேண்டிய சரியான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இருந்தாலும் பெயர், பிறந்தநாள், பிறந்த இடம், தாய்மொழி, ஆதார் எண், தொலைபேசி எண், வாக்காளர் அடையாள அட்டை எண், ஓட்டுநர் உரிமம் ஆகிய விவரங்கள் ஆன்லைன் வழியாக சேகரிக்கப்படவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

மக்கள் ஆன்லைனில் இந்த விவரங்களை பதிவு செய்த பின்னர் ஒப்புகை எண் ஒன்று வழங்கப்படும். இந்த எண்ணை வீட்டிற்கு தகவல் சேகரிக்க வரும் அதிகாரிகளிடம் காட்டினால், அந்த விவரங்கள் சரி பார்க்கப்பட்டு உறுதி செய்யப்படும். மேலும் மக்களிடையே கைரேகை, பயோ மெட்ரிக் ஆவணங்கள் எதுவும் பெறப்படாது எனவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here