பொறியியல் படிப்புகளுக்கு கணிதம், இயற்பியல் பாடங்கள் முக்கியம் – ஏஐசிடிஇ பல்டி!!

0

சில நாட்களுக்கு முன்பு பொறியியல் படிப்பதற்கு கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் பிடித்திருப்பது அவசியம் இல்லை என்று தெரிவித்து இருந்த ஏஐசிடிஇ தற்போது அந்தர் பல்டியாக வழக்கம் போலவே இந்த பாடங்களை படித்திருந்தால் அவசியம் என்று தெரிவித்துள்ளது.

பொறியியல் படிப்பிற்கான சேர்க்கை

இந்தியாவில் பொறியியல் படிப்பதை பலரும் தங்களது கனவாக வைத்திருப்பர். இந்த படிப்புகளை படிப்பதற்கு பல கிடுக்குபிடிகள் உள்ளது. அந்த வகையில் இதனை படிக்க விரும்பும் மாணவர்கள் கண்டிப்பாக தங்களது பள்ளி படிப்பின் போது (12 ஆம் வகுப்பு) கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களை ஒரு பாடமாக படித்திருந்தல் அவசியமான ஒன்று ஆகும். இது வழமையாக பின்பற்றப்பட்டு வருவது ஆகும்.

‘சைவத்துக்கு மாறியவுடன் ஆரோக்கியமாக உணர்ந்தேன்’ – நடிகை ராஷி கண்ணா தகவல்!!

இப்படியான சூழலில் ஏஐசிடிஇ இந்த ஆண்டிற்கான பாடத்திட்டங்களுக்கான கையேட்டினை வெளியிட்டது. அதில் இயற்பியல், கணிதம், வேதியியல், கணினி அறிவியல், மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், உயிரியல், உயிரி தொழில்நுட்பம், விவசாயம், தொழிற்படிப்புகள், இன்பர்மேட்டிக்ஸ் ப்ராக்டிசஸ் , இன்ஜியனிரிங் கிராபிக்ஸ் , பிசினஸ் ஸ்டடிஸ் , தொழில்முனைவோர் ஆகிய பாடங்களில் ஏதுனும் ஒன்றினை படித்திருந்தாலே பொறியியல் படிப்பிற்கு போதுமானது என்று தெரிவிக்கப்பட்டது. அதே போல் இந்த படிப்புகளுக்கு பட்டியலின மாணவர்கள் 40 சதவீதம் எடுத்திருந்தாலே போதுமானது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Maths, Physics no longer mandatory for engineering entry - The Hindu

இந்த அறிவிப்பு ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் மற்றும் கண்டனங்கள் எழுந்தது. இப்படியான சூழலில் மீண்டும் ஏஐசிடிஇ இந்த அறிவிப்பினை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. இப்படி ஏஐசிடிஇ மாற்றி மாற்றி அறிவிப்பினை அறிவித்ததால் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here