தமிழகத்தில் சூடுபிடிக்க துவங்கும் தேர்தல் களம் – எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் இன்று வேட்பு மனு தாக்கல்!!

0

தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. வரப்போகின்ற தேர்தலுக்காக இன்று திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் தமிழக முதல்வர் பழனிச்சாமி உள்ளிட்டோர் வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளனர்.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் 234 தொகுதியிலும் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12ம் தேதி முதல் துவங்கியது. கடந்த சனி மற்றும் ஞாயிற்று கிழமை விடுமுறை நாட்கள் என்பதால் அன்று வேட்பு மனு தாக்கல் நடைபெறவில்லை. இன்று வேட்பு மனு தங்களின் இரண்டாம் நாள் என்பதால் இன்று அரசியல் முக்கிய தலைவர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி தமிழக முதல்வர் மற்றும் அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவதற்கு இன்று மதியம் 1 மணி அளவில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளார். அதேபோல் திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு இன்று மதியம் 12.30 மணி அளவில் தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி தங்கவேலிடம் தாக்கல் செய்கிறார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

இவர்களை தொடர்ந்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், அமமுக கட்சி தலைவர் தினகரன் உள்ளிட்டோர் இன்று தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளனர். தற்போது அனைத்து கட்சிகளிலும் வேட்பாளர்களை அறிவித்து வேட்பு மனு தாக்கல் மிக மும்மரமாக நடைபெற்று வருவதால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here