நீங்களும் இப்படி இறங்கிட்டீங்களா?? நாம் தமிழர் கட்சிக்காக நிதி திரட்டும் பாரதி ராஜா!!

0

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் காலமே பரபரப்பாக இருந்து வருகிறது. இந்நிலையில் அரசிய கட்சிக்காக நிதி திரட்டுவதற்கு பிரபல இயக்குனர் களம் இறங்கியுள்ளார்.

பாரதிராஜா:

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் பாரதிராஜா. தமிழ் சினிமாவை அரை படப்பிடிப்பில் இருந்து வெளிப்புற படப்பிடிப்பிற்கு கொண்டு சென்றவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. இவரது படம் அனைத்தும் மக்கள் மனதில் ஆணித்தனமாக பதியும் அளவிற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழ் சினிமாவில் முன்னணி பிரபல நடிகைகளான ராதிகா, ராதா, ரேவதி மற்றும் ரேகா போன்ற பல நடிகைகளை சினிமாவிற்கு அறிமுகபடுத்தியவர் இவரே. மேலும் இவருக்கு இந்திய அரசு கடந்த 2004ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்தது. இவர் இயக்கிய திரைப்படங்களுக்காக பல விருதுகளையும் அள்ளியுள்ளார். தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் நியூ அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

இதனால் தமிழகமே தற்போது அனல் நெருப்பாக இருந்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் பாரதி ராஜா இந்த தேர்தலில் நாம் தலைவர் கட்சிக்காக நிதி திரட்டும் பணியில் இறங்கியுள்ளார். அந்த வகையில் முதலாவதாக அந்த கட்சிக்கு பாரதிராஜா ரூ.25,000 நிதியாக செலுத்தியுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்தார். மேலும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களையும் நிதி கொடுப்பதற்காக அழைப்பு விடுத்துள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here