தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் நியூ அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0

நடிகர் தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் தி கிரே மேன் படத்தின் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் ஆட்டமிட்டு வருகின்றனர்.

தி கிரே மேன்:

தமிழ் சினிமாவில் தனது தோற்றம் மூலம் முதலில் ஒதுக்கப்பட்டு பின்பு தனது அயராத முயற்சி மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் தான் தனுஷ். இவரது படம் அனைத்தும் தனி கதைக்களத்தை கொண்டிருக்கும். மேலும் இவர் நடிப்பதோடு நிறுத்தி விடமால், படங்களை இயக்கியும், பாடல் எழுதியும், பாடகராகவும் என சினிமா துறையில் அனைத்து பகுதியிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார். இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் பேமஸாகி உள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இதன் அடுத்தகட்டமாக தனுஷ் ஹாலிவுட்டிற்கும் சென்றுள்ளார். அதில் அவர் ஏற்கனவே ஓர் படத்தில் நடித்த நிலையில் தற்போது மற்றொரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை அவென்ஜர்ஸ், எண்டு கேம் ஆகிய படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் இயக்குகின்றனர். இந்த படத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்காக கடந்த மாதமே தனுஷ் அமேரிக்கா சென்றுவிட்டார்.

விஜய் டிவி வழங்கும் சிறந்த மருமகளுக்கான விருது – பாரதி கண்ணம்மாவா?? ராஜா ராணியா??

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. இதனை அந்த படத்தின் இயக்குனர் தனது ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்தார். தற்போது இந்த படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இந்த படம் வருகிற 2022ம் ஆண்டில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தலத்தில் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர். தற்போது இந்த தகவலினால் தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here