விஜய் டிவி வழங்கும் சிறந்த மருமகளுக்கான விருது – பாரதி கண்ணம்மாவா?? ராஜா ராணியா??

0

தற்போது “எங்கள் வீட்டு மருமகள்” என்ற விருது விஜய் தொலைக்காட்சியின் டெலிவிஷன் அவார்ட்ஸ் விழாவின் ஒரு பகுதியாக வழங்க உள்ளனர். அது குறித்த ஒரு ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ்

விஜய் தொலைகாட்சியில் ஆண்டுதோறும் சின்னத்திரையில் பிரபலமாக இருப்பவர்களுக்கு என்று ஒரு விருது வழங்கும் விழா எப்போதும் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் விழாவிற்கு என்று ஒரு முன்னோட்ட நிகழ்ச்சியினை நடத்தினர். அந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது. இதனை அடுத்து இந்த விழாவில் பல துறைகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

‘அஸ்வினே I love u’ – கடைதிறப்பு விழாவில் அஸ்வினுக்காக அலைமோதிய ரசிகர்கள்!!

அதில் முக்கியமானது தான் “எங்கள் வீட்டு மருமகள்” விருது. இந்த விருது ஒரு சீரியலில் அதாவது ஒரு குடும்பத்தில் சிறந்த விளங்கும் ஒரு மருமகளுக்கு வழங்கப்பட உள்ளது. தற்போது இந்த விருதிற்கு போட்டியாக “பாரதி கண்ணம்மா” ரோஷினி, “ராஜா ராணி” மானசா போன்றோர் இருக்கின்றனர். இதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதில் அனைத்து நடிகைகளும் தங்களது நடிப்பினை வெளியிப்படுத்தி ரசிகர்களின் மனதினை வென்றுள்ளனர். அதே போல் இந்த ப்ரோமோவில் ரோஷினி, ஆலியா மனசா உள்ளிட்டோர் தாங்கள் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு கடந்து வந்த பிரச்சனைகள் மற்றும் கஷ்டங்களை எடுத்து கூறியது அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. அதே போல் சிலர் தங்களது வாழ்வில் தங்களது உடல் அமைப்பினை கூட குறை கூறியிருக்கிறார்கள் என்று வருத்தமும் அடைந்தனர். ப்ரோமோ காரணமாக இந்த நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பு சற்று அதிகமாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here