‘அஸ்வினே I love u’ – கடைதிறப்பு விழாவில் அஸ்வினுக்காக அலைமோதிய ரசிகர்கள்!!

0

பிரபல கடை திறப்பு விழா ஒன்றில் கலந்துகொண்ட பாலா மற்றும் அஸ்வினுக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. அதனை தொடர்ந்து பலரும் ஷிவாங்கி எங்க அஸ்வின் என்று கத்தியுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அஸ்வின்

தற்போது விஜய் டிவியில் குக் வித் கோமாளியில் நடிக்கும் கோமாளிகள் அனைவரும் பிரபலமடைந்து வருகின்றனர். அதாவது அனைத்து கடை திறப்பு விழாவிற்கும் பெரும்பாலும் இந்த பிரபலங்களே கலந்துகொள்கின்றனர். ஏனெனில் தற்போது மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்தவர்கள் என்றால் ஷிவாங்கி, அஸ்வின், புகழ் மற்றும் பாலா தான்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஷிவாங்கி கூட சமீபத்தில் ஒரு ரெஸ்டாரண்ட் திறப்பு விழாவிற்கு சென்றிருந்தார். தற்போதும் அதே போல பாலாவும், அஸ்வினும் ஒரு ரெஸ்டாரண்ட் திறப்பு விழாவிற்கு சென்றிருந்தனர். அங்கு ரசிகர்கள் அலைமோதியுள்ளனர். மேலும் அஸ்வினுக்கு அங்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. அஸ்வின் I love U என பலரும் கூச்சலிடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதிலும் ஷிவாங்கி எங்கே என பலரும் கத்த ஆரம்பித்தனர்.

கேப்டன், டிடிவி தினகரன் இன்று நேரில் சந்திப்பு – சூடுபிடிக்கும் தேர்தல்!!

மேலும் ஒருவர் அஸ்வினுக்காக ஒரு பாட்டும் பாட ஆரம்பித்து விட்டார். பாலா வழக்கம் போல தனது கவுண்டரை போட ஆரம்பிக்க பல கைதட்டல்கள் தான். அஸ்வின் இவ்வளவு வருடங்களாக இந்த சினிமா துறையில் இருந்தும் அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் இந்த அளவிற்கு கைகொடுத்துள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் அஸ்வினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த பெண் அஸ்வினுக்காக பாடியது கூட ஷிவாங்கி நியாபகம் தான் வந்திருக்கும் என ரசிகர்கள் கமன்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here