நோக்கிய நிறுவனத்தின் அதிரடி முடிவு – ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வேலை பறிபோக வாய்ப்பு!!

0

தொலைத்தொடர்பு மற்றும் மின்னணு நிறுவனத்தில் பிரபலமாக இருக்கும் நோக்கியா நிறுவனம் விரைவில் தனது நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு பெரிய ஆப்பு வைக்கவுள்ளதாக தெரிகிறது.

நோக்கியா:

முந்தைய களங்களில் போன் தயாரிப்பதில் பிரபல நிறுவனமாக திகழ்ந்து வந்தது நோக்கியா. அந்த நிறுவனம் தயாரிக்கும் அனைத்து போன்களும் சிறந்த தரத்தில் இருக்கும். அதனாலே பயனாளர்கள் அந்த போனை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வந்தனர். மேலும் அடுத்து சில காலங்களில் ஸ்மார்ட் போன்களின் வருகையால் நோக்கியா நிறுவனம் சற்று தடுமாறியது. இருந்தும் நாளடைவில் நோக்கியா நிறுவனம் ஸ்மார்ட் போன்களை தயாரித்து தனது கால் தடத்தை பதிக்க துவங்கியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இந்த நிறுவனம் தொலைதொடர்பு மற்றும் மின்னணு வகை நிறுவனத்தில் மிக பிரபலமாக இருந்து வருகிறது. தற்போது அந்த நிறுவனம் பற்றிய ஓர் அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. அந்த நிறுவனம் வரும் காலங்களில் ஆராய்ச்சியில் அதிக முதலீடு செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக அந்த நிறுவனம் தனது செலவினை குறைக்க முடிவு செய்துள்ளது.

ஹாப்பி பர்த்டே சாய்னா நேவால் – ரசிகர்கள் வாழ்த்துமழை!!

இதனால் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் வேலைக்கு பிரச்னை ஏற்படவுள்ளது. தற்போது நோக்கியா நிறுவனத்தில் 90,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அடுத்த இரு ஆண்டுகளில் நோக்கியா நிறுவனத்தில் சுமார் 5,000 முதல் 10,000 ஊழியர்களின் வேலைக்கு ஆபத்து ஏற்படவுள்ளதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here