ஹாப்பி பர்த்டே சாய்னா நேவால் – ரசிகர்கள் வாழ்த்துமழை!!

0

பாட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால் இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு தற்போது ரசிகர்கள் தங்களது வாழ்த்து மழையை தெரிவித்து வருகின்றனர்.

சாய்னா நேவால்:

பாட்மிண்டன் விளையாட்டில் உலக அளவில் புகழ் பெற்றவர் தான் சாய்னா நேவால். இவர் யாருமே முறியடிக்காத வகையில் பல சாதனைகளை பேட்மிண்டன் விளையாட்டில் பதித்துள்ளார். இதுவரை விளையாடிய போட்டிகளில் இவர் மொத்தம் 24 சர்வதேச விருதுகளை பெற்று அசத்தியுள்ளார். மேலும் இவர் கடந்த 2015ம் ஆண்டில் உலக அளவில் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்து அசத்தினார். தற்போது இவர் தரவரிசை பட்டியலில் 20வது இடத்தில் உள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதுமட்டுமல்லாமல் கடந்த 2006ம் ஆண்டில் 4ஸ்டார் டோர்னமெண்ட் போட்டியை வென்ற முதல் இந்திய மற்றும் ஆசிய பெண்மணி என்ற பெருமையும் பெற்றார். இவருக்கு இந்த உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார். அந்த அளவிற்கு இவர் பேட்மிண்டன் போட்டிகளில் சிறந்து விளங்குகிறார். கடந்த 2016ம் ஆண்டு இவருக்கு இந்திய அரசால் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இவர் ஏற்கனவே ராஜிவ் காந்தி கேள் ரத்னா மற்றும் அர்ஜுனா விருது ஆகியவற்றை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை இன்றைய தங்க விலை நிலவரம்!!

இதுபோல் இவர் பெற்ற விருதுகள் மற்றும் இவரது புகழை சொல்லிக்கொண்டே போகலாம். தற்போது உலக புகழ் பெற்ற சாய்னா நேவால் இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் விளையாட்டு துறை வீரர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here