ஹாஸ்பிடலில் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வரும் பாரதி – ஹேமாவிற்கு உண்மை தெரியவருமா??

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது எதிர்பாராத சம்பவங்கள் நடந்து வருகிறது. இன்றைய எபிசோடில் கண்ணம்மா வீட்டுக்கு வந்ததை வீடே கொண்டாடுகிறது. மேலும் லட்சுமி சுமதி முதுகில் இருக்கும் காயத்தை கண்டுபிடித்து விடுகிறார்.

பாரதி கண்ணம்மா

கண்ணம்மா தற்போது வீட்டிற்கு வந்ததை அடுத்து பாரதி வீட்டிற்கு வந்து விடுவானோ என்று வீடே அதிர்ச்சியில் உள்ளனர். அதற்குள் அகிலன் பாரதிக்கு முக்கியமான ஒரு வேலையை கொடுத்ததால் அங்கு சென்று விடுகிறார் பாரதி. வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் கண்ணம்மாவை வந்து வந்து பார்த்துக்கொள்கின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கண்ணம்மாவிடம் எப்படி பேசுவது என்று தெரியாமல் முழித்துக்கொண்டுள்ளனர். ஆனாலும் கண்ணம்மா யாரிடமும் முகம் கொடுத்தும் பேசவில்லை. அடுத்ததாக அகிலன் அஞ்சலியை கட்டிப்பிடித்து அழுகிறார். என்னோட இன்னொரு அம்மா தான் கண்ணம்மா அண்ணி.

இத்தனை வருஷம் கழிச்சு அவங்களை பாக்குறேன் என்று கண்கலங்குகிறார். அஞ்சலியும் அகிலனுக்கு ஆறுதல் சொல்ல உனக்கு அவ அம்மா என்றால் அவள் எனக்கு அக்கா எனக்கே கண்ணம்மாவை இத்தனை வருஷம் கழிச்சு பாத்ததும் கண்கலங்கிடுச்சு என்று சொல்கிறார்.

மேலும் பாரதியை அகிலன் சமாளிக்க வேணு கண்ணம்மாவிடம் பேச முயல்கிறார். அதாவது அதற்கு கண்ணம்மா பிடிக்கொடுக்கவும் இல்லை. ஸ்வீட்டில் சர்க்கரை கம்மியாக இருக்கு என்று வேணு சொல்ல கண்ணம்மா இதுக்கு மேல போட்ட தேகட்டிடும் என்று கூறுகிறார்.

சென்னை இன்றைய தங்க விலை நிலவரம்!!

அடுத்ததாக சௌந்தர்யா அங்கு வர எவ்வளவு இனிப்பு இருந்தாலும் பரவாயில்லை. எங்க குடும்பம் மொத்தமும் ரொம்ப சந்தோசமா இருக்கோம் என்று சொல்கிறார். கண்ணம்மா எல்லா வேலையும் முடிக்க அனைவரும் சாப்பிட அமர்கின்றனர். சௌந்தர்யா கண்ணம்மாவை அழைக்க வர மறுக்கிறார்.

எவ்வளவு சொல்லியும் கேட்பதாக இல்லை. அடுத்து ஹேமா வர வற்புறுத்தி உட்கார வைக்கிறார். திடீரென வேணு பாரதியை நியாபகப்படுத்த குடும்பமே அதிர்ச்சியாகிறது. சௌந்தர்யா வேணுவை முறைக்க அமைதியாகிறார். அடுத்ததாக கண்ணம்மா அனைவரிடம் உட்கார்ந்து சாப்பிட மல்லிகை அவருக்கு பாயசத்தை கொடுக்கிறார்.

இதனால் ஹேமா சாப்பிட்டு கொண்டிருக்கும் போது ஹேமாவிற்கு சுட்டுவிட கண்ணம்மா பதறுகிறார். மேலும் கண்ணம்மாவே ஹேமாவிற்கு ஊட்டி விடுகிறார். இதனை பார்த்த அனைவரும் கண்கலங்குகின்றனர். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here