Friday, May 17, 2024

கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்க திட்டம் – ஆஸ்திரேலியா பிரதமர் அறிவிப்பு!!

Must Read

ஆஸ்திரேலியா அரசு தனது நாட்டு மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசியை வழங்க திட்டமிட்டுள்ளது.

கொரோனா பரவல்:

கடத்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகத்தில் உள்ள அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் தடுப்பூசி கண்டுபிடிக்கும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இங்கிலாந்தில் உள்ள அஸ்ட்ராஜெனெகா பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பூசியை தற்போது பரிசோதித்து வருகிறது. பரிசோதனை தற்போது மூன்றாம் கட்டத்தில் உள்ளது. இந்த பரிசோதனை இந்த ஆண்டின் இறுதிக்குள் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

corona vaccine
corona vaccine

ஆனால், இந்த நிறுவனம் தரப்போகும் தடுப்பூசிக்கு பல நாடுகள் போட்டிபோட்டு கொண்டு இருக்கின்றது. இன்னும் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் முடிவுபெறாத நிலையில் 5.6 பில்லியன் தடுப்பூசிகள் தயாரிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளபட்டுள்ளது. அதன் அடிப்படையில் தற்போது, ஆஸ்திரேலியா நாட்டு அரசும் இந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு உள்ளது.

ஆஸ்திரேலியா அரசு முடிவு:

தற்போது ஆஸ்திரேலியாவில் கொரோனாவால் 24,000 பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 400க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர். முன் ஏற்பாடாக தடுப்பூசிகளை அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்திடம் இருந்து வாங்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, பெக்டன் டிக்கின்சன் என்ற அமெரிக்கா நிறுவனத்திடம் 100 மில்லியன் ஊசிகள் மற்றும் சிரிஞ்ச்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அந்நாட்டின் பிரதமர் கூறியதாவது “அஸ்ட்ராஜெனெகா பல்கலைக்களம் தயாரிக்கும் தடுப்பூசிகள் நம்பக தன்மையுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த மூன்றாம் கட்ட சோதனைகள் வெற்றி அடைந்தால் இந்த தடுப்பூசிகளை நாங்கள் தயாரித்து ஆஸ்திரேலியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளோம். 25 மில்லியன் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இதற்காக அஸ்ட்ராஜெனெகாவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம்.. காங்கிரஸ் புதிய வாக்குறுதி.. முழு விவரம் உள்ளே!!

நாடு முழுவதும் 4 ஆம் கட்ட லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு அண்மையில் முடிவடைந்த நிலையில், 5 ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பிரச்சாரம் சூடு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -