நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 19 வயது மாணவி தற்கொலை – கோவையில் சோகம்!!

0

கோவை மாவட்டத்தில் மருத்துவர் ஆக வேண்டும் என்கிற கனவோடு நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 19 வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்வு பயத்தினால் மாணவி தற்கொலை செய்தது பெற்றோர்கள், கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

மாணவி தற்கொலை:

கோவை மாவட்டம் வெங்கடசாமி சாலை ஆர்.எஸ் புரம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகள் சுபஸ்ரீ. 19 வயதான இவர் தனியார் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்காக பயின்று வந்துள்ளார். இம்முறை கொரோனா பாதிப்பு காரணமாக செப்டம்பர் மாதத்திற்கு நீட் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. மேலும் தேர்வுகள் ரத்து செய்வது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

தேர்வுகள் ரத்து செய்யப்படாத காரணத்தால் மன உளைச்சலில் இருந்த மாணவி நேற்று மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து மாணவியின் தாயார் அளித்த புகாரில் உடலை கைப்பற்ற போலீசார் உடற்கூறு ஆய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பிரணாப் முகர்ஜி உடல்நிலை மோசமாக உள்ளது – மருத்துவமனை அறிக்கை!!

நீட் தேர்வால் ஏற்கனவே தமிழகத்தில் 2016ம் ஆண்டு மாணவி அனிதா, 2019ம் ஆண்டு மோனிஷா, ரித்துஸ்ரீ, வைஷியா ஆகிய மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழகத்தையே உலுக்கிய நீட் தேர்வு தற்கொலை தற்போது கோயம்புத்தூரில் அரங்கேறி உள்ளது பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here