பிரணாப் முகர்ஜி உடல்நிலை மோசமாக உள்ளது – மருத்துவமனை அறிக்கை!!

0

டெல்லியில் உள்ள ராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை மருத்துவமனை இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நுரையீரல் தொற்றுநோய்களின் தாக்கத்தால் அவரது உடல்நிலை மோசமடைந்து உள்ளது. முகர்ஜி தொடர்ந்து செயற்கை சுவாசம் ஆதரவில் இருப்பதாகவும், தற்போது நிபுணர்கள் குழுவால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரணாப் முகர்ஜி உடல்நிலை:

84 வயதான பிரணாப் முகர்ஜி ஆபத்தான நிலையில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 10) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் முகர்ஜியின் மூளையில் ஒரு பெரிய உறைவு தெரியவந்தது, அதற்காக அவர் அவசரகால உயிர் காக்கும் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அறுவை சிகிச்சைக்கு பின்னர் வெண்டிலேட்டர் (செயற்கை சுவாசம்) உதவியுடன் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

அறுவை சிகிச்சைக்கு முன்னர் முகர்ஜிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆகஸ்ட் 10 அன்று அவரது ட்வீட்டில் “ஒரு வழக்கமாக நடைமுறையில் மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்தபோது, எனக்கு கொரோனா தொற்று உறுதியானது. கடந்த வாரத்தில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தயவுசெய்து சுய தனிமைப்படுத்தவும், கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவும்” என கூறி இருந்தார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!!

அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மகன் அபிஜித் முகர்ஜி இன்று காலை ட்விட்டரில் பதிவிட்டு இருந்த நிலையில், மருத்துவமனை வெளியிட்டு உள்ள அறிக்கையில் உடல்நிலை மோசமடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் 13 வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு முகர்ஜி காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்தவர் பிரணாப் முகர்ஜி. ஜூலை 2012 முதல் 2017 வரை ஜனாதிபதியாக பணியாற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here